மலாய் மொழியில் வெளியாகும் கபாலி

0
166

ரஜினி நடித்துள்ள கபாலி படத்தை மலாய் மொழியிலும் வெளியிடுகின்றனர். அதற்காக ரஜினியின் கதாபாத்திரத்துக்கு குரல் கொடுன்ன சரியான நபரை தேடி வருகின்றனர்.

கபாலி படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் மலேசியாவில் எடுக்கப்பட்டன. மலேசியா படத்தில் பிரதானமாக வருகிறது. அதனால் மலாய் மொழியிலும் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

மலாய் மொழியில் ரஜினியின் கபாலி கதாபாத்திரத்துக்கு குரல் கொடுக்க 200 -க்கும் அதிகமானவரிடம் குரல் தேர்வு நடத்தப்பட்டது. இறுதியில் அருண் என்பவரை தேர்வு செய்துள்ளனர். மலாய் மொழியில் படத்தின் டப்பிங் முடிந்த பிறகு அம்மொழியிலேயே படத்தின் டீசரை வெளியிடுகின்றனர்.

கபாலி ஜுலை 1 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY