பன்னீர் புலாவ்!

0
159

தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி – 4 கப்

ஏலக்காய் – 2

பட்டை – 2

கிராம்பு – 2

மிளகு – 3

வெங்காயம் – 1 (நறுக்கியது)

இஞ்சி பூண்டு விழுது – 3 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் – 3

பன்னீர் – 3 கப்

சர்க்கரை – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிது

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 8 கப் தண்ணீர் விட்டு, அதில் அரிசியை கழுவிப் போட்டு, நன்கு கொதிக்க வைத்து, அரிசியை வேக விடவும். பின் அரிசி வெந்ததும், அதில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி விட்டு, தனியாக எடுத்து வைக்கவும். பின் மிக்ஸியில் பச்சை மிளகாயை நன்கு அரைத்துக் கொள்ளவும்.

இப்போது மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதனை சூடேற்றி, எண்ணெய் விட்டு காய வைக்கவும். பின் அதில் ஏலக்காய், பட்டை, கிராம்பு மற்றும் மிளகு போட்டு, நன்கு வதக்கவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும்.

பின்பு அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து, 1-2 நிமிடம் வதக்கி, அதில் பன்னீரை சேர்த்து, தீயை குறைவில் வைத்து சற்று நேரம் வதக்கவும். இப்போது அதில் வேகத்துள்ள அரிசி மற்றும் சிறிது உப்பு சேர்த்து, 2-3 நிமிடம் கிளறவும். பின்பு அதில் சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து, மறுபடியும் 2-3 நிமிடம் வதக்கவும்.

இப்போது சுவையான பன்னீர் புலாவ் ரெடி!!!

NO COMMENTS

LEAVE A REPLY