சூர்யா,கார்த்தி,சிவக்குமாரும் சேர்ந்து நடிப்பார்களா?

0
161
கமல்ஹாசன் மகள் சுருதிஹாசன் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் அவரது அப்பாவுடன் சேர்ந்து நடிக்கிறார்.

தற்போது தமிழ் திரை உலகில் சூர்யா, அவரது தம்பி கார்த்தி இரண்டு பேருமே முன்னணி ஹீரோக்களாக இருக்கிறார்கள். இவர்களுடைய அப்பா சிவக்குமாரும் பிரபல ஹீரோவாக வலம் வந்தவர். 3 பேரும் சேர்ந்து நடிப்பார்களா என்பது குறித்து சூர்யாவிடம் கேட்ட போது…

‘மனம்’ என்ற ‘ரீமேக்’ படத்தில் நான், அப்பா, தம்பி 3 பேரும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் வேறு மொழி படத்தின் மறு ஆக்கம் என்பதால் அதில் நடிக்க விரும்பவில்லை.

புதிய கதையில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறோம். 3 பேரும் சேர்ந்து நடிக்கும் படம் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இருக்கும். எனவே நல்ல கதை கிடைத்தால் அப்பா, தம்பியுடன் நடிக்க காத்திருக்கிறேன், என்றார்.

சூர்யா ‘24’ படத்துக்கு பிறகு எஸ் 3 படத்தில் நடித்து வருகிறார். கார்த்தி ‘காஷ்மோரா’ படத்தில் நடித்து வருகிறார். சூர்யா அடுத்து கபாலி இயக்குனர் பா.ரஞ்சித் படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. கதை கிடைத்ததும் அப்பாவுடன், அண்ணன், தம்பி சேர்ந்து நடிக்க திட்டமிட்டுள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY