முந்திரி பருப்பு

    0
    617

    முந்திரி பருப்பு:

    முந்திரி பருப்பு இயற்கையின் அதிசயம். இதில் வைட்டமின் பி, மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், நார் புரதம், ஆகிய சத்துகளைகொண்டது. முந்திரி இதயத்தை பாதுகாப்பதோடு இதயம் சம்பந்தமான அனைத்து நோய்க்கும் சிறந்தது முந்திரி பருப்பு.
    முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது. அதாவது 100கிராம் முந்திரி பருப்பில் சுமார் 553 கலோரிகள் உள்ளது. மேலும், முந்திரி பருப்பில்  நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமதாதுக்கள் உள்ளதோடு,  நோய்கள் மற்றும் புற்றுநோயினைவராமல்  தடுக்க உதவும் தாவர வேதியங்கள் (அ)பைட்டோகெமிக்கல்ஸ் அதிக அளவில் உள்ளதுகுறிப்பிடத்தக்கது.

    முந்திரி பருப்பில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய ஒற்றைநிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களான (monounsaturated-fatty acids) ஒலியிக் மற்றும்பால்மிட்டோலெயிக் அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இத்தகைய கொழுப்புஅமிலங்கள் உடலுக்கு தீமை விளைவிக்ககூடிய கொலஸ்டிராலை (low-density lipoprotein cholesterol) குறைத்து நன்மை தரக்கூடிய கொலஸ்டிராலை (high-density lipoprotein cholesterol)அதிரிக்க செய்கிறது. மேலும் ,  ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்கள் கரோனரிஇதய நோயினை தடுக்க உதவும் என்று சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் மூலமாகஅறியமுடிகிறது.

    முந்திரி பருப்பில்  மாங்கனீசு, பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம்மற்றும் செலினியம் கனிம தாதுக்கள் அதிக அளவில் உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு சிலமுந்திரி பருப்புகளை உணவில் சேர்த்துக்கொண்டாலே  மேற்கூறிய கனிம தாதுக்கள்குறைப்பாட்டினால் வரக்கூடிய நோய்களை தடுக்கலாம்.

    முந்திரி பருப்பில் உள்ள மெக்னீசியமானது, எலும்புவலுவடைவதற்கு உதவுகிறது. மெக்னீசியம்குறைபாட்டினால் உயர் இரத்த அழுத்தம், தசை இறுக்கம்,ஒற்றை தலைவலி  மற்றும் சோர்வு ஏற்படுகிறது. முந்திரிபருப்பில் அதிகமாக உள்ள செலினியம் ஊட்டச்சத்தானதுஉடலுக்கு நோயெதிர்ப்பு திறனை தரவல்லநொதிகளான குளுடாதயோன் பெராக்ஸிடேஸ் நொதிக்குஇணை காரணியாக செயல்படுகிறது.

    முந்திரி பருப்பில் காப்பர் அதிக அளவில் உள்ளது. இது பலமுக்கியமான நொதிகளுக்கு இணை காரணியாக செயல்படுகிறது, காப்பர், மாங்கனீசுமற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களானது சைட்டோகுரோம் சி ஆக்ஸிடேஸ் மற்றும் சூப்பர்ஆக்சைடு டிஸ்முடேஸ் நொதிகளுக்கு இணை காரணிகளாக உள்ளது. மேலும் காப்பரில்உள்ள தைரோசினேஸ் ஆனது,  தைரோசினை மெலனின் ஆக மாற்றுகிறது. மெலனின் முடிமற்றும் தோலுக்கு நிறம் கொடுக்கும் நிறமி ஆகும்.

    முந்திரி பருப்பிலுள்ள துத்தநாகம் பல்வேறு நொதிகளுக்கு இணை காரணியாகஉள்ளதோடு, வளர்ச்சி, விந்து உற்பத்தி, செரிமானம் மற்றும் நியூக்ளிக் அமிலம்சிதைவடைதலை ஒழுங்குபடுத்துகிறது.

    முந்திரி பருப்பில் அத்தியாவசிய வைட்டமின்களான பேண்டோதெனிக் அமிலம்(வைட்டமின் B-5), பைரிடாக்சின் (வைட்டமின் பி-6), ரிபோபிலாவின் மற்றும் தையமின்(வைட்டமின் பி-1) அதிக அளவில் உள்ளன.  100கிராம் முந்திரி பருப்பில் 0.147 மில்லி கிராம்அல்லது தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவில் 35 சதவீத பைரிடாக்சின் உள்ளது.

    இத்தகையவைட்டமின்கள் செல்களில் புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் வளர்சிதைமாற்றத்திற்கு உதவுகிறது.

    முந்திரி பருப்பில் குறைந்த அளவிலான சியாசாந்தின் உள்ளது. இது கண்ணில் உள்ள கருவிழி படலத்தை பாதுகாக்க உதவுகிறது.

    மேற்கூறிய பல்வேறு பயன்பாடுகள் உடைய முந்திரி பருப்பை நாமும் உணவில்சேர்த்துக்கொண்டு உடல் நலத்தோடு வாழ்வோமே!

     

    NO COMMENTS

    LEAVE A REPLY