சிரஞ்சீவியின் 150வது படமான கத்தி ரீமேக்

0
119

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியின் 150வது படம் என்னவாக இருக்கும் என்று நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வந்தது. இப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக தொடங்கியிருக்கிறது. சுமார் 9 வருடங்கள் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த சிரஞ்சீவி இன்று தன்னுடைய 150 வது படத்தை பூஜையுடன் தொடங்கியிருக்கிறார்.

 சிரஞ்சீவி நாயகனாக நடிக்க இருக்கும் இப்படத்தை அவரது மகன் ராம் சரண் சொந்தமாக தயாரிக்கிறார். இன்று நடைபெற்ற படத்தின் பூஜையில் அல்லு அர்ஜுன், ராம் சரண், அல்லு சிரிஷ், அல்லு அரவிந்த் என்று சிரஞ்சீவியின் மொத்தக் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கின்றனர்.

 

இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது சமந்தா ,சிரஞ்சீவியை சந்தித்து ‘நான் தான் தெலுங்கிலும்  நடிப்பேன் ‘ என்று அடம்பிடித்து கைப்பற்றி விட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY