சிம்பு ,சூரி காமெடி கலாட்டா

0
163

சிம்பு நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘இது நம்ம ஆளு’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி, சந்தானம் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். குறிப்பாக, இப்படத்தில் சூரியின் கதாபாத்திரம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

சிம்பு பேசும் ஒவ்வொரு வசனத்துக்கும் சூரி கொடுக்கும் பஞ்ச் வசனங்கள் தியேட்டரையே கலகலப்பாக்கியிருக்கிறது. முதன்முதலாக சிம்புவுடன் இணைந்திருக்கும் சூரிக்கு இந்த படம் நிச்சயம் ஒரு பெரிய வெற்றியை தேடிக் கொடுத்திருக்கிறது என்று சொல்லலாம்.

இந்நிலையில், இப்படத்தில் தனக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை சூரியை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, தியேட்டரே தெறிக்குது. விசில் பறக்குது. அவ்வளவும் சிம்பு என்கிற ஒரே ஆளுக்கான மாஸ். என்னையும் பக்கத்துல நிற்க வைச்சதுக்கு சிம்புவுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

சிம்புவின் நிறைய படங்களில் சந்தானம்தான் காமெடியில் கலக்குவார். முதன்முதலாக சூரியுடன் சிம்பு கூட்டணி வைத்துக் கொண்டது அவருக்கும் கைகொடுத்துள்ளது என்று கூறலாம்

NO COMMENTS

LEAVE A REPLY