வரகு அரிசி உப்புமா

0
961

 

தேவையான பொருட்கள்

வரகு அரிசி

உப்பு                                            : தேவையான அளவு
வெங்காயம்                                 : 1
பச்சை  மிளகாய்                         : 3
கருவேப்பிலை                             : 10 – 12
இஞ்சி                                           : சிறு துண்டு

பொடியாக அரிந்த காய்கறிகள் :

காரட்                                            :   தேவையான அளவு

முட்டைகோஸ்                               :   தேவையான அளவு
குடைமிளகாய்                               :   தேவையான அளவு
பச்சை பட்டாணி                           :   தேவையான அளவு

தாளிக்க :

கடுகு                                              : 1 Tsp
உளுத்தம் பருப்பு                           : 1 Tsp
கடலை பருப்பு                               : 3 Tsp
பெருங்காயம்                                : சிறு துண்டு
எண்ணெய்                                     : 2 Tsp

செய்முறை :

அடுப்பில் மிதமான தீயில் அடி கனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய்  ஊற்றவும்.
எண்ணெய்  காய்ந்ததும் கடுகு வெடிக்க விடவும்.

பிறகு உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
இப்போது பெருங்காயம் சேர்த்து, உடனே கருவேப்பிலை மற்றும் நீள வாக்கில் இரண்டாக பிளந்த பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.

பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்கவும்.இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வாசனையுடன் இலேசாக நிறம் மாறியதும் காரட், முட்டைகோஸ், பட்டாணி  மற்றும் குடைமிளகாய் போட்டு 1/2 நிமிடம் வதக்கவும்.

உப்பு போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றவும்.நன்கு சாரணியால் கலக்கி விட்டு கொதிக்க விடவும்.கொதித்ததும் வரகு அரிசி  கழுவி சேர்க்கவும்.

நன்கு கலந்து விட்டு மூடி சிறிய தீயில்  வேக விடவும்.அவ்வப்போது திறந்து கிண்டி விட்டு மூடவும்.வேக சுமார் பத்து நிமிடங்களாகும்.

இப்போது சுவையான  வரகு அரிசி உப்புமா தயார்.தேங்காய் சட்னியுடன் சுவைக்கவும்.

 

குறிப்பு – வரகு எலும்பு உறுதி பெறச் செய்யும். இந்த உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.

NO COMMENTS

LEAVE A REPLY