வெஜிடபிள் பிரியாணி

0
198

தேவையானவை

  • பாஸ்மதிஅரிசி – 2 கப்
  • பெரிய கேரட் – 1
  • உருளை – 2
  • பீன்ஸ் – 10 – 15
  • பட்டாணி – 1/4கப்
  • மல்லித்தழை – சிறிது
  • புதினா – சிறிது
  • ஜிஞ்சர்கார்லிக் பேஸ்ட் – 2 டேபிள்ஸ்பூன்
  • வெங்காயம் – 3
  • தக்காளி – 3
  • சோயாசங்க் – 20 உருண்டைகள்
  • மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
  • தனியாத்தூள் – 1 டீஸ்பூன்
  • சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
  • உப்பு – சுவைக்கு
  • எண்ணெய் – 2 1/4 குழிக்கரண்டி
  • நெய் – 2 டேபிள்ஸ்பூன்
  • பட்டை, கிராம்பு, ஏலம் – சிறிது

செய்முறை

  • அரிசியை 1/2 மணிநேரம் ஊற விடவும்.சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடங்கள் ஊற வைத்து, நீரை நன்கு பிழிந்து வைக்கவும்.
  • இந்த பிரியாணியின் ஸ்பெஷலே காய்கள் மிகப்பொடியாக இருப்பதுதான். அதனால் அனைத்து காய்களையும் பட்டாணி சைஸுக்கு நறுக்கிகொள்ளவும்.
  • பிரஷர் குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலம் தாளிக்கவும்.
  • நீளமாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கி, மல்லி, புதினா தழைகள சேர்க்கவும்.அனைத்தும் வதங்கியதும், உப்பு, மசாலா பொடிகள், சோயாசங்க், காய்களை சேர்த்துக்கிளறவும்.
  • 2 3/4கப் நீர் சேர்த்து ஊறிய அரிசியை சேர்த்து நெய் விட்டு கிளறி குக்கரை மூடி விடவும்.2 விசில் வந்ததும் இறக்கி விட வேண்டும். மல்லி இலையை தூவி பரிமாறவும்.

NO COMMENTS

LEAVE A REPLY