கல்வியில் தடங்கல் நீங்க ஹயக்ரீவர்-திருவஹீந்திரபுரம்

  0
  210

  108 திவ்ய க்ஷேத்திரங்களில் ஒன்றாகத்திகழும் நடுநாட்டுத் திருப்பதி என்று அழைக்கப்படும்தேவநாதப் பெருமாள், ஹேமாம்புஜவல்லித் தாயார் அருளும் திருவஹீந்திரபுரம்:மிகவும் சிறப்புப் பெற்றது.. தேவர்களுக்கு தலைவனாக இருந்தது கொண்டு தேவநாதன் என்ற திருநாமம் உண்டாயிற்று.

  ஸ்ரீமந் நாராயணன் நித்ய வாசம் செய்ய இருப்பதை அறிந்த ஆதிசேசன் இங்கு ஒரு நகரத்தை உண்டு பண்ணினான்.அதுதான் திரு அஹீந்த்ர (ஆதிசேஷ) புரம் என பெயர் பெற்று விளங்கியது. தேவநாத பெருமாளை வணங்குவோர் பெரிய பதவி, நிலைத்த செல்வம், மக்கட்பேறு , நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் ஆகியவற்றை பெறுவார்கள் தாயார் ஹேமாம் புஜவல்லி.

  பார் அனைத்தையும் காக்கும் பெருமை பெற்றவள் என்பதால் பார்கவி என்ற திருநாமமும் உண்டு. இங்குள்ள உற்சவருக்கு “மூவராகிய ஒருவன்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரம்மாவுக்குரிய தாமரை, சிவபெருமானின் நெற்றிக்கண், தலையில் ஜடாமுடி, கையில் சங்கு,சக்கரம் ஏந்தி மும்மூர்த்திகளின் அம்சமாக வீற்றிருக்கிறார்.

  கருடநதி, சேஷ தீர்த்தம் என்ற நீர்நிலைகள் புகழ்பெற்றவை … பெருமாளுக்கு தீர்த்த தாகம் ஏற்பட்டபோது கருடாழ்வாரிடம் தீர்த்தம் கொண்டு வரப் பணித்தார். அவர் எடுத்து வர தாமதம் ஆனதால் ஆதிசேஷனிடம் சொல்ல தன் வாலால் அடித்து பெருமாளுக்கு தீர்த்தம் தந்தார். அதனால் அதற்கு சேஷ தீர்த்தம் என்று பெயர் வந்தது. இது ஒரு பிரார்த்தனை கிணறு ஆகும். கருடன் கொண்டு வந்த நதி கருடநதி என்றழைக்கப்பட்டு அருகில் ஓடுகிறது.ரிஷியினுடைய சாபத்தால் இன்றும் இந்த நதியின் தீர்த்தம் மழைக்காலத்தில் ரத்தம் போல் சிவப்பாக ஓடுகிறது.

  குரு, ராகு, கேது தோசம் உள்ளவர்கள் இங்கு வணங்கினால் தோசம் நிவர்த்தி ஆகும். ஹயக்ரீவருக்கு உலகிலேயே இவ்வூரில்தான் முதன்முதலில் கோயில் ஏற்பட்டது. ஆஞ்சநேயர் யுத்த நேரத்தில் சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கிச் செல்கையில் கீழே விழுந்த ஒரு துண்டு மலையான ஆஷாட மலை மருத்துவ குணம் நிறைந்தது.. ஹயக்ரீவரும், நிகமாந்த மஹா தேசிகர் சன்னதியும் சிறப்புப் பெற்றவை.

  தனது இளம்வயதில் கருட மந்திரத்தை ஜபித்து, கருடரை தரிசித்த தேசிகர், அவராலேயே ஹயக்ரீவ மந்திரம் உபதேசிக்கப்பட்டு, விஷ்ணுவை இங்கே ஹயக்ரீவராகக் (ஞானத்திற்கான தெய்வம், சரஸ்வதிக்கே ஞானம் தந்தவர்) கண்டு அருளப்பெற்றவர். தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் பாண்டித்யம் பெற்ற தேசிகர் தன் வாழ்வில் முக்கியமான நாள்களை இங்கே தங்கியும், முக்கிய பாசுரங்களை இங்கே இயற்றவும் செய்தவர்.

  அவர் வாழ்ந்த வீடு இன்றும் தேசிகன் திருமாளிகையாகவும், கட்டிய கிணறும் இன்னும் இங்கே இருக்கிறது. தேசிகர் புரட்டாசி திருவோணத்தன்று ரத்னாங்கியில் ஒவ்வொரு படியாக மலையேறி ஹயக்ரீவரை தரிசிக்கச் செல்கிறார். ஹயக்ரீவருக்கு ஸ்ரவண பௌர்ணமியும்(அவதார தினம்), நவராத்திரி ஒன்பதாம் நாள் மஹாநவமியும் விசேஷம்.

  விஜயதசமி அன்று அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் தங்கள் மற்றும் தங்கள் குழந்தைகளின் வித்யாரம்பத்தை இங்கே மலையேறி ஹயக்ரீவரை வழிபட்டே துவங்குகின்றனர். நானிலமும் தான் வாழ, நான்மறைகள் தாம் வாழ, மாநகரில் மாறன் மறை வாழ – ஞானியர்கள் சென்னி அணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே இன்னுமொரு நூற்றாண்டு இரும்! இவர்களை வணங்கி நல்ல செயல்களைத் துவங்கலாம்! கடலூரிலிருந்து(3kms) பண்ருட்டி செல்லும் வழியில் திருவகிந்திபுரம் உள்ளது.

  கல்வியில் தடங்கல் நீங்க ஹயக்ரீவர்-திருவஹீந்திரபுரம்:

  Thiruvahindrapuram
  பரிமுகக் கடவுள் எனும் ஹயக்ரீவர்,ஞானத்தின் இருப்பிடமாகத்திகழ்பவர். கலைமகளின் குரு என்று போற்றப்படுபவர். இந்தப் பரிமுகக்கடவுளை குழந்தைகள் வணங்கி வந்தால், அச்சம் நீங்கி,பரீட்சை நன்கு எழுதி, நல்ல

  மதிபெண்கள் பெற்று, தேர்ச்சி பெறுவார்கள். வேலையில் சேர நேர்காணல், தேர்வு இவற்றில் வெற்றி பெறவும், இவரை வணங்கினால் போதும். ‘பரி’ என்றால் குதிரை, குதிரை முகத்தை உடையவராகிய ஹயக்ரீவரே, பரிமுகக் கடவுள் ஆவார். திருமாலின் தசாவதாரங்கள் பூவுலகில் ஏற்பட்டவை.

  ஆனால் ஹயக்ரீவர் அவதாரம்,தேவலோகத்தில் ஏற்பட்டதாகும். நான்கு வேதங்களையும், அரக்கன் திருடிச் செல்ல நான்முகம் பதரி பயந்து நாராயணனை அடிபணிய மகா விஷ்ணு குதிரை வடிவில் வந்த அரக்கனை, குதிரை வடிவம் தாங்கிச் கொன்று வேதங்களை மீட்டு நான்முகனுக்கு அளித்து படைப்புத் தொழிலைத் தொடங்க வைத்தார்.

  இது தான் ஹயக்ரீவர் அவதாரம் ஆகும். சாதாரணமாக, தெய்வங்களுக்கு மலர்மாலைகள் சமர்பிக்கப்படும். திருவஹீந்திரபுரத்திலுள்ள லக்ஷ்மி ஹயக்ர்ரிவருக்கு ஏலக்காய் மாலைகள் தருகிறார்கள். இவருக்கு தேனை நிவேதனம் செய்து தருகிறார்கள்.

  அதனை, சின்னக் குழந்தை நாவில் தடவினால் நல்ல பேச்சு வரும். பெரியவர்களும் உண்டால் ஞானம் வரும். தேர்வுக்குப் போகும் மாணவர்கள் உண்டால் வெற்றி நிச்சயம். சாதாரணமாக சில குழந்தைகள் எவ்வளவு படித்தாலும் மறந்து விடும். மிகவும் பயப்படும்.

  வியாழக்கிழமைகளில் லட்சுமி ஹயக்ரீவருக்கு பூஜை செய்து, இனிப்பு சேர்த்த கடலைப்பருப்பு சுண்டலை நிவேதனம் செய்து சாப்பிட்டால் மிகவும் நன்மை பயக்கும். மூன்று அல்லது ஐந்து வியாழக்கிழமைகள் தொடர்ந்து செய்தால் தேர்வில் தேர்ச்சி, உத்யோக உயர்வு உத்யோகம் இவை எல்லாம் கண்டிப்பாக கிடைக்கும்.

  NO COMMENTS

  LEAVE A REPLY