நெல்லை தமிழ் பேச பயிற்சி எடுக்கும் விஜய்!

0
156

பெரும்பாலும் விஜய் கிராமத்து கதைகளில் அதிகமாக நடித்ததில்லை. சில படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த வரிசையில் தற்போது பரதன் இயக்கும் தனது 60-வது படத்தில் அவர் நகரம், கிராமம் என இரண்டுவிதமான வேடங்களில் நடிக்கிறார். இதில் நகரத்து கெட்டப்புக்காக தெறியில் நடித்த அதே ஹேர்ஸ்டைலில் தோன்றும் விஜய், கிராமத்து கெட்டப்புக்காக தலையில் சிறிதளவே முடி வைத்தபடி நடிக்கிறார். அதோடு கிராமத்து பசங்க அதிகமாக யூஸ் பண்ணுவது போன்ற உடைகளை அதிகமாக அணிந்து நடிக்கிறாராம்.

மேலும், முதன்முறையாக நெல்லை தமிழ் பேசி நடிக்கும் விஜய்யை, பாபநாசம் படத்தில் கமல் நெல்லை தமிழ் பேசி நடித்தது போலவே அந்த வட்டார தமிழை பேச வைக்கிறாராம் பரதன். அதனால் இந்த படத்திற்கான கதையில் நடிப்பதற்கு முன்பே நெல்லை தமிழை கவனிக்கத் தொடங்கிய விஜய், விரைவில் அந்த கெட்டப்பில் நடிக்கப்போகிறார். அதனால் அதற்கான வசனங்களை அவ்வப்போது படித்து வரும் விஜய், அந்த வார்த்தைகளை எப்படி உச்சரிப்பதை என்பதை ஒரு நெல்லை தமிழ் தெரிந்தவரிடமும் கேட்டறிந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறாராம்.

NO COMMENTS

LEAVE A REPLY