வெள்ளரிக்காய் சூப்

0
140

தேவையான பொருட்கள்:

வெங்காயம் – 1
துருவிய வெள்ளரிக்காய் – 1
மைதா மாவு – 1 மேஜைக் கரண்டி
காய்கறி வேக வைத்த தண்ணீர் – 100 மில்லி
பாலேடு அல்லது கிரீம் – 2 மேசைக் கரண்டி
வெண்ணெய் – 25 கிராம்
மிளகுத்தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை நறுக்கி 2 நிமிடம் வரை வெண்ணெய்யில் வதக்க வேண்டும். பின்னர் வெள்ளரிக்காயை அதில் போட்டு 2 நிமிடம் வரை வதக்க வேண்டும். பாலையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். காய்கறி வேக வைத்த தண்ணீரை இதனுடன் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்னர் அதனுடன் உப்பு, மிளகுத்தூள், பாலேட்டை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

மற்றொரு முறை:

தேவையான பொருட்கள்

வெள்ளரிக்காய் – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
கார்ன் ப்ளார் – 1 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – 300 மி.லி.
கிரீம் – 2 டீஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு

செய்முறை:

வெள்ளரிக்காயை துருவிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயத்தை 2 நிமிடம் வதக்கவும், பிறகு துருவிய வெள்ளரிக்காயையும் 2 நிமிடம் வதக்கவும்.

பின்பு கார்ன் ப்ளாரையும் போட்டு கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலக்கவும். அதன் பின்பு தண்ணீரைச் சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும். பின்பு உப்பு, மிளகுத்தூள், கிரீமைச் சேர்த்து சூடாகப் பறிமாறவும்.

NO COMMENTS

LEAVE A REPLY