3 மொழிகளில் உ ருவாகும் தேவி படம்

0
339

பிரபுதேவா, தமன்னா நடித்து வரும் படம் ‘தேவி’. இந்தி நடிகர் சோனுசூட், இந்தி நடன இயக்குனர் பாராகான் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார்.

தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்த படம் பற்றி கூறிய பிரபுதேவா…

“ஒரே நேரத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் ஒரு படத்தை உருவாக்குவது சாதாரண விஷயம் அல்ல. இது பல சுவாரஸ்யங்களும், திருப்பங்களும் நிறைந்த படம்.

இதில் பணியாற்றும் அனைவருக்கும் இந்த படம் வாழ்க்கையின் சிறந்த அடையாளமாக அமையும் என்று நம்புகிறேன். பல்வேறு மொழிகளை கடந்து கலைஞர்களை ஒன்று சேர்க்கும் வலிமை சினிமாவுக்குத்தான் உண்டு.

அந்த விதத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, அனைத்தும் எனது தாய் மொழிகள்தான். மக்கள் விருப்பத்தையும் கடந்து எனக்கு ஒரு லட்சிய கனவு திட்டம் இருக்கிறது. அது மகாபாரதத்தை ஹாலிவுட் படமான, ‘லாட் ஆப் த ரிஸ்க்’ படத்துக்கு இணையாக பிரமாண்டமாக எடுக்க வேண்டும் என்பதுதான்” என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY