ரெயின்போ கிண்ணத்தப்பம்

0
195

தேவையான பொருட்கள்;-
பச்சரிசி – 2 கப் அளவு
தேங்காய்ப் பால் –  மூன்றரை கப்
முட்டை – 3
உப்பு – ஒரு சிட்டிகை
சீனி – ஒன்றரை – 2 கப்
ரோஸ் நிற ஃபுட் கலர் – சில துளிகள் (நிறம் விருப்பம் போல்)
நெய் அல்லது தேங்காய் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் – 5.

செய்முறை:
பச்சரிசியை தண்ணீரில் நன்கு அலசி 3 அல்லது 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறிய அரிசியை தேங்காய்ப்பால் சேர்த்து பட்டு போல் அரைத்து எடுக்கவும்.
அத்துடன் முட்டை, ஏலக்காய்,சீனி, உப்பு சேர்த்து மீண்டும் நன்கு அரைத்து எடுக்கவும்.

அரைத்த மாவு வடிகட்டும் அளவு இளக்கமாக தண்ணீர் போலவும், அரைபட்ட மாவு கட்டியில்லாமல் சாஃப்டாக இருக்க வேண்டும்.

வடிகட்டிய கலவையை இரண்டு பாதியாக பிரிக்கவும். ஒன்றை வெள்ளை நிறமாகவும், மற்ற பாதியை பிடித்த நிறம் சில துளிக்ள் கலந்தும் வைக்கவும். ரோஸ் கலர் இங்கு உபயோகித்திருக்கிறேன்.

குக்கர் பாத்திரம் அல்லது கேக் செய்யும் ஏழு இன்ச் அளவு உள்ள பாத்திரம் ஒன்றை எண்ணெய் அல்லது நெய் தடவி தயார் செய்யவும்.

தடவி ரெடி செய்த பாத்திரத்தில் முதலில் 100 – 125 மில்லி வெள்ளை நிறமுள்ள அரைத்து வடிகட்டிய மாவுக் கலவையை ஊற்றவும். இந்தளவு ஊற்றினால் தான் மெல்லிய அடுக்காக வரும்.

இதனை அவிக்க இட்லி பாத்திரத்தில் தேவைக்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.

மாவு ஊற்றிய பாத்திரத்தை வைத்து 5 நிமிடம் ஆவியில் வேகும் வரை வைத்து எடுக்கவும்.

ரோஸ் கலர் சேர்த்த மாவை வெந்த வெள்ளை நிற மாவுக் கலவை மீது ஊற்றவும்.திரும்பவும் ஆவியில் வைத்து வேக வைக்கவும்.

மீண்டும் இப்படியே இரண்டு மாவுக் கலவையும் தீரும் வரை ஒன்றின் மேல் ஒன்றாக விட்டு வேக வைத்து எடுக்கவும்.

கடைசியாக ஊற்றும் ரோஸ் கலர் கொஞ்சம் திக்கான கலராக இருந்தால் பார்க்க அழகாக இருக்கும்.

வெந்து வெளியே எடுத்த பின்பு வேக வைத்த பாத்திரம் நன்கு குளிர விடவும்.

பின்பு அதனை அப்படியே தலை கீழாக ஒரு தட்டில் வைத்து திருப்பவும். இப்படி அழகாக இருக்கும். கவனமாக எண்ணெய் தடவிய கத்தி கொண்டு கட் செய்து பரிமாறவும். கட் செய்த துண்டில் மேற்பரப்பில் சிறிது எண்ணெய் தடவினால் பார்க்க பள பளப்பாக இருக்கும்.

சுவையான அழகான ரெயின்போ கிண்ணத்தப்பம் ரெடி.

NO COMMENTS

LEAVE A REPLY