மலையாளப் படமான ‘சார்லி’யின் தமிழ் ரீமேக்கில் மாதவன்

0
89

மிகவும் கவனம் பெற்ற மலையாளப் படமான ‘சார்லி’யின் தமிழ் ரீமேக்கில் மாதவன் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

மலையாளத்தில் துல்கர் சல்மான் ஏற்றிருந்த வேடத்தில் அவர் நடிக்கிறார். இந்தப் படத்தை முன்னணி இயக்குநரான விஜய் இயக்க உள்ளார்.

இதுதொடர்பாக படத்தயாரிப்பு நிறுவனம் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் படத்துக்கு மாதவன் தான் எங்களுடைய முதல் விருப்பமாக இருந்தது. தமிழ் ரசிகர்களுக்காக கதையில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இயக்குநர் விஜய், தற்போது தேவி என்கிற படத்தை முடிக்கிற வேலைகளில் உள்ளார். அடுத்ததாக ஜெயம் ரவியைக் கொண்டு ஒரு படத்தை இயக்குகிறார். இதற்குப் பிறகு சார்லி ரீமேக்கை இயக்குவார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY