ரவா தோசை

0
188

தேவையானவை 

 • மாவு கரைக்க:
 • ரவா – ஒரு கப்
 • அரிசி மாவு – கால் கப்
 • தயிர் – கால் கப்
 • உப்பு – ஒரு தேக்கரண்டி
 • தண்ணீர் – 2 1/2 கப்
 • ருசிக்கு:
 • இரண்டாக உடைத்த முந்திரிப் பருப்பு – 10 பருப்பு
 • முழு குருமிளகு – 10
 • மிகப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2
 • சீரகம் – அரை தேக்கரண்டி
 • மிகப் பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு இன்ச் துண்டு
 • மிகப் பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2
 • தோசை சுடுவதற்கு நெய்/எண்ணெய் – கால் கப்

செய்முறை

 • மாவு கரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கரைத்து வைக்கவும். ஆப்ப மாவை விட இளகியது போல் கரைக்க வேண்டும்.
 • கரைத்த மாவுடன் சீரகத்தை கலந்து வைக்கவும். பிறகு அரை ஸ்பூன் நெய்/எண்ணெய் காயவைத்து அதில் முந்திரி, குருமிளகு சேர்த்து முந்திரி நிறம் மாறியதும் தீயை அணைத்து விட்டு கரைத்த மாவில் கொட்டி கிளறவும்.
 • வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை கலந்து வைக்கவும். தோசை தவாவை காயவைத்து அதில் ஒரு கரண்டி மாவை சுற்றி ஊற்ற அது தானாகவே பரவிக் கொள்ளும்.
 • உடனே மேலே 3 தேக்கரண்டி வெங்காயம், மிளகாய், இஞ்சி தூவி நெய் தெளித்து ஒரு புறம் வெந்ததும் திருப்பி மறுபுறமும் நன்கு மொறுகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும். இதற்கு தேங்காய் சட்னி ரொம்பவும் அருமையாக இருக்கும்.

குறிப்பு

மாவு கரைக்க மொத்தமாக எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு சுற்றினால் போதும் ஈஸியாக கரைந்து கட்டியில்லாமல் வரும். மொறுமொறு ஹோட்டல் ரவா தோசைக்கு மாவை பால் போல கரைத்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் இருந்தால் நல்ல ஓட்டை ஓட்டையாக தானாக தவாவில் பரவும் தீயை இதற்கு கூட்டியே வைக்க வேண்டும். பொறுமையாக ஊற்றி ஒரு புறம் நன்கு மொறுமொறுவென வெந்த பின் திருப்பி போட வேண்டும்.

NO COMMENTS

LEAVE A REPLY