கோடிஸ்வர தாத்தா

0
324

பொள்ளாச்சி -புரவிபாளையம் -கோடிஸ்வர சாமிகள் ...

கொங்கு வளநாட்டில் வாழ்ந்த மக்கள் தெய்விக மகான்களை வாழவைத்தவர்கள்.. இவ்வகையில் பொள்ளாச்சியில் புரவிபாளையம் ஜமீனில் மக்களைக் காத்து ரட்சித்தவர்தான் நமது கோடித் தாத்தா.

புரவிபாளையம் ஜமீன்தார் வடநாட்டில் குடும்பத்தோடு கடற்கரையில் தங்கள் விடுமுறையை கழித்துவிட்டுத் திரும்பிக் கார் கதவைத் திறந்த போது பூட்டி இருந்த காருக்குள் அமர்ந்திருந்தார் பெயர் தெரியாத பெரியவர் .

வயது 100 கடந்த பழுத்த பழமாக இருந்த பெரியவரை பார்த்து திடுகிட்ட ஜமீன்தார் வலுகட்டாயமாக பெரியவரை கீழே இறக்கி விடுகிறார் ..பின்பு ஜமீன்தார் குடும்பம் புரவிபாளையம் அரண்மனை வந்து இறங்கி காரின் பொருள் வைப்புப் பகுதியை திறந்து பார்த்தால் கடற்கரையில் இறக்கி விடப்பட்ட பெரியவர் அங்கே இருந்தார் …. ஜமீன்தார் ஒன்றும் பேசாமல் அமர்ந்த அந்த பெரியவரை தங்கள் அரண்மனையில் தங்க அனுமதிக்கிறார் .

ஜமீன்தார் அரண்மனையில் ஐக்கியமாகிவிட்ட பெரியவர் பளபளக்கும் வெண்தோலையும் ஆற்றல் மிக்கக் கண்களையும் கொண்டுள்ளார் யாரிடமும் ஒன்றும் பேசாத மெளன யோகியாகி இருக்கிறார் ..வந்தவர்களில் சிலரை கோடி கோடியாக வாழ வாழ்த்துகிறார் ..”கோடி பேருக்கு அன்னமளி” என்கிறார் ..மக்கள் கூட்டம் ‘கோடி’என சொல்லும் பெரியவருக்கு கோடித்தாத்தா என்றும் கோடி சாமிகள் என்றும் பெயர் வைத்து அழைத்தது ..வந்து பார்த்து வாழ்த்து பெற்றவர்கள் கோடிகளை கண்டனர்.

1980 -ல் கோடித்தாத்தாவை பார்க்க வந்த இசைஞானி இளையராஜா முதன் முறையாக விரட்டப்பட்டார் ..மறுமுறை வந்து ஆசி பெற்றார் …அது முதல் இசைஞானி இளையராஜா அடிக்கடி தற்போதும் பொள்ளாச்சி -புரவிபாளையம் வந்து செல்கிறார் .

1959 இல் புரவிபாளையம் வந்தவர் 35 வருடங்கள் கழிந்து 1994 இல் சமாதி அடைந்தார் .அவர் வயது யாராலும் கணிக்க முடியவில்லை தெய்வீகப் பிறவி பெற்ற மனிதர்களின் ஸ்தூல காலம் அவர்களுக்கே தெரியாது .காரணம் பிரம்மநிலை பெற்று விட்டால் ஸ்தூலம் , லெளகீகம் ஒன்றும் இல்லை .1986 இல் பிரிட்டன் மற்றும் ஸ்பெயினில் இருந்து வந்த GERENTOLOGY (வயோதிகம் ,மூப்பியல் துறை ) பிரிவை சேர்ந்த விஞஞானிகள் தாத்தாவின் DNA ,குரோமோசோம் இவற்றை எடுத்து இவர் எந்த காலத்தை சேர்ந்தவர் ? என அறியமுற்பட்டபோது அவர்களால் தெளிவான முடிவுகளைச சொல்லமுடிய வில்லை .

தாத்தாவின் அறைக்குள் அவர் உடல் 9 துண்டுகளாக இருந்ததை பார்த்தும் இருகிறார்கள் .இவ்வகை நிலைக்கு நவகண்ட யோகம் என்றும் பெயர் உள்ளதாம் ஓருமுறை வாருங்கள் நல்ல அனுபவங்களை பெறலாம்.

15 வருடங்களுக்கு முன்பு நான் தரிசித்த முதல் ஜீவ சமாதி இது தான் .வழிகாட்டும் குருவாக அருள் புரிகிறார் . அமாவாசை , பெளர்ணமி நாட்களில் மக்கள் அன்னதானத்தில் கலந்து கொண்டு பயன் பெறுகிறார்கள் .பொள்ளாச்சிலிருந்து புரவிபாளையதிற்கு தாராளமாக உள்ளூர் பேருந்து வசதி உள்ளது. பொள்ளாச்சிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

நீதிச்சாமி.

எனது பெயர் நீதிச்சாமி. 2007 October 11ல் எனது குடும்பம் கோடி தாத்தா மூலம் மறுஜென்மம் எடுத்தது. அன்று எங்களது குடும்பத்தினர் நான்கு பேருக்கும் 11-10-2007 பிறந்தநாள். அன்று முதல் எனது பெயர் கோடி நீதிச்சாமி. எனது குடும்பம் கோடிதாத்தாவின் ஆசி பெற்ற குடும்பமாக ஆகிவிட்டது.

தாத்தா விருப்பப்பட்டவர்களிடமிருந்து குறைந்தபட்சமாகவும் விருப்பமாகவும் ஆரஞ்சு மிட்டாய் வாங்கி தன் வாயில் போட்டு சுவைத்து விட்டு திரும்பவும் அவர்களிடமே கொடுத்து உண்ணும்படி கூறுவாராம். அதன்மூலம் அவர்களுக்கு பலநன்மைகளைச் செய்வாராம். இது உலகறிந்த உண்மை.

“தாத்தா 18 வருடத்திற்கு மேல் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்து கொண்டு இருந்திருக்கிறார் என்றால்…தவம் முடித்தது, ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காகவா? இல்லை, தாத்தாவின் பேச்சுக்களில் உலக மக்களின் நன்மைக்காக மட்டுமெ…..”தாத்தாவின்பேச்சு – “பரிபூரணம்”“நான்கோடிவருஷம் வாழ்வேன்”“எல்லாமே நலம்தான். “எல்லாமே ஜெயம்தான்.கோடி கோடியாய் பெருகட்டும்“

மலர்க்குவியல்!

மல்லிகை, முல்லை, மரிக்கொழுந்து, சம்பங்கி என்று வகைவகையான மலர் மாலைகளும், எலுமிச்சங்கனிகளும், அவரது பாதார விந்தங்களில் குவிந்தபடி இருந்தன. இன்னொரு வினோதத்தையும் அங்கே கண்டு பூரிக்க முடிந்தது. நீண்ட நாளைக்குப்பின் நெருங்கிய உறவினரை காண வருவோர் பாசத்தோடு பட்சணங்கள் வாங்கி வருவார்கள் இல்லையா? அதைப்போல இங்கே சாக்லேட்டுகள், பொங்கல், ஜிலேபி, பழவகைகள், வீட்டில் பக்குவமாக சமைத்து எடுத்து வந்த பலகார வகைகள் போன்றவற்றை தாத்தா கொஞசம் சாப்பிடுங்கள் என்று உள்ளன்போடு ஊட்டிவிடும் பாங்கு. வேண்டாம் என்றால் அவர்கள் மனம் வேதனைப்பட்டு விடக்கூடாதே
என்பதற்காகக் கொடுத்ததை எல்லாம் ஏற்றுக் கொள்ளும் பரிவு. காலடியில் கண்ணீரோடு முகம் புதைத்து புலம்புவோர்க்கு புன்னகையோடு ஆசி கூறி அரவணைத்திடும் கருணை வௌளமாய் இப்படிக் குடும்பப் பாங்கான காட்சிகள் பல அங்கே அரங்கேறிக் கொண்டு இருக்க நமது முறை வருகிறது.

கலகலசிரிப்பு

அவர் முன் நின்ற நம்மை, ஊடுருவிப் பார்கிறார். நாம் வந்த நோக்கம் பற்றி சொல்லாமலேயே அவர் புரிந்து கொண்டதைச் சில வினாடிகளுக்கு பின் உணர்ந்து திகைக்கிறோம்.வெண் முத்துக்களை வெண்கலத் தாம்பாளத்திலே கொட்டியதைப் போல கலகலவென்ற சிரிப்போசை அந்த தாழ்வாரமெங்கும் எதிரொலிக்கின்றது. அதை தொடர்ந்து அசரீரி வாக்கு போல சுவாமிகளின் குரல் ஒலிக்கின்றது.

“நாடு கெட்டுப் போச்சு! நல்லா எழுது!! எல்லாம் படிப்பாங்க!!! எல்லாமே நலம்தான். ஜெயம்தான். கோடி கோடியாய் பெருகட்டும்“ என்று ஆசி கூறி முடிந்ததும் எலுமிச்சங்கனி ஒன்றை நம் கரத்தில் வைக்கிறார்.

நமக்குப் பின்னால் பக்தர்களின் நீண்ட வரிசை. எனவே நாம் ஒதுங்கி நின்று அவர்களின் தரிசனத்துக்கு வழிவிட்டு கவனிக்கிறோம். ஏற்கனவே வந்து வேண்டியது நிறைவேறப் பெற்றவர்கள் 100ம், 50ம், 20ம்மாக தரும் ரூபாய் நோட்டுக்களை பொம்மையை ஆர்வத்தோடு வாங்கும் குழந்தையைப் போல வாங்கி முன்னும் பின்னுமாக திருப்பி பார்த்து விட்டு ஒரு சிரிப்பு. இந்த பணம்தான் மனித குலத்தை என்ன பாடெல்லாம் படுத்தி விடுகின்றது. என்று நினைத்துச் சிரித்து இருப்பாரோ?

யாமிருக்க பயமேன்!
அடுத்து வரும் பக்தரை உங்கள் இதயச் சுமைகள் எல்லாம் ஏற்றுக்கொள்ள சுமைதாங்கியாய் யாமிருக்க பயமேன். இறக்கி வையுங்கள் என்ற ரீதியில் பார்க்கிறார்.

சென்ற ஆண்டு வரை கொடி கட்டிப் பறந்த குடும்பம், வியாபாரம் நொடிந்ததால் இன்று வீதிக்கு வந்து விட்ட வேதனையைக் கண்ணீரோடு அவர் இறக்கி வைக்க ஏற்கனவே பக்தர் கொடுத்துச் சென்றுள்ள பணம் அவர் கைக்கு மாறுகிறது.

கைமேல் பலன்!

அன்று சுவாமிகளைத் தரிசித்து விட்டு புரவிபாளையத்தை விட்டு கிளம்பிய போது மாலைப் பொழுது மறைந்து இருள் சூழத் தொடங்கி இருந்தது. அந்த இருள் நமது மனதில் புகவில்லை. அங்கு முன்னிலும் பிரகாசம்தான் இருந்தது.
முதலில் சந்தித்தவர்!

சுவாமிகளை முதன் முதலாக 1940ம் ஆணடில் நேரில் கண்டவர் பற்றிய விபரம் கிடைத்தது. அவர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருந்து ஓய்வு பெற்ற திரு என். வரதராஜீலு.

நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, நாம் வந்த நோக்கம் பற்றி கூறியதும் ஆர்வத்தோடு எழுந்து வந்து நம்மை அரவனைத்து வரவேற்றார்.

மண்டபத்திலிருந்து தனுஷ்கோடி வரை உள்ள ரயில்வே பகுதிகளைக் கண்காணிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அச்சமயம் 1940 சுதந்திரப் போராட்டம் உச்சக்கட்டத்தில் நடந்துகொண்டிருந்தது. துறைமுகம் , கப்பல் கட்டும் பகுதி இவற்றைக் கண்காணிப்பது என் பொறுப்பு.

தினமும் மண்டபத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு இரயிலில் சென்று வருவேன். அப்பொழுது தனுஷ்கோடி இரயில் நிலையத்திலிருந்து சுமார் முக்கால் மைல் தூரத்தில் மேற்கு திசையில் அந்தோணியார் கோவில். அருகில் ஒரு சிறு மேடை. அதில் ஒருவர் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்யும் காட்சியைக் கண்டேன்.

அவரை நேரடியாகச் சந்தித்து விடுவது என்ற சங்கல்பத்துடன் அடுத்த நாள் புறப்பட்டேன். ஒற்றைக்காலில் தவம் புரியும் நிலையில் உள்ளவரைச் சுற்றி வந்து கும்பிட்டேன். அவருக்கு எதிரே அமர்ந்து உற்றுப் பார்த்தேன்.

ஒரு மணி நேரம் நகர்ந்தது. அப்பொழுது அவர் ஒற்றைக்காலில் தவம் கலைந்து இருகால்களையும் புவியில் பதித்து நடக்கத் தொடங்கினார். எங்களால் ஓடிச்சென்றும் அவரைப் பிடிக்க முடியவில்லை.

கடல்நீரைச் சமீபித்ததும் நன்றாகத் திரும்பி பின் தொடர்ந்து சென்ற என்னை உற்று நோக்கினார். நான் ஆடிப்போய் நின்றிருந்த சமயம் பேசினார்.

”இங்கு நான் நின்றிருந்த இன்று உன்னைக் கண்டேனப்பா. இங்கு கோடான கோடி மக்கள் வந்து போனார்கள். என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் நீ சிரத்தை எடுத்துக் கண்டுபிடித்தாய்” என்று கூறியவர் சற்று தாமதித்து மீண்டும் தொடர்ந்தார்.

”வருகிற 15ம் நாள் பவுர்ணமியன்று உன் இல்லம் வருகிறேன்” என்று கூறினார். ”ஆகட்டும் குருதேவா” என்று மன நிறைவோடு கூறி விடைபெற்றேன்.அன்று முதல் தினமும் தனுஷ்கோடி வந்து சுவாமிகளுக்கு பலகாரம் ஊட்டிவிட்டு வருவேன்.அவர் என்னிடம் எதுவும் பேச மாட்டார். பலகாரம் ஊட்டுவதோடு சரி.
கப்பல் வந்தது!

சுவாமிகள் என் வீட்டுக்கு வருவதாகச் சொன்ன பவுர்ணமி நாளும் வந்தது. ஒன்றரை மாதமாக தாமதமாகவே வந்து கொண்டிருந்த தனுஷ்கோடி ரெயில் அன்று வெகு சீக்கிரமாகவே வந்து விட்டது. ஏழரை மணிக்கு சுவாமிகளுக்கு பலகாரம் ஊட்டினேன். ஒன்பதரை மணிவரை சுவாமிகள் என்னிடம் எதுவுமே பேசவில்லை. எனக்கு பயமாகப் போய்விட்டது. சுவாமிகள் என்னுடன் வரமறுத்து விடுவாரோ என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது கண்களை மூடிய நிலையில் சுவாமிகள் பேசினார். ”கப்பல் வருகிறதா பார்” என்றார்.

நான் எழுந்து சென்று கிழக்குப் பக்கமாகக் கூர்ந்து கவனித்துப் பார்த்தேன். கப்பல் வந்து கொண்டு இருப்பது தொலைவில் புள்ளியாக தெரிந்தது?” கப்பல் வருகிறது சுவாமி” என்றேன்.
”சரி நீ போய் அந்தோணியார் கோவிலைச் சுற்றி வந்து பிரார்த்தித்து விட்டு வா” என்றார்.

மகத்துவம்

எனது கை கால்கள் லேசாக நடுங்கின. தட்டு தடுமாறிச் சென்று கோவிலைச் சுற்றி வந்து தரையில் நீள விழுந்து கும்பிட்டேன். இதைப் பார்த்த பாதிரியார். ”ஏன் இப்படி விழுந்து கும்பிடுகிறீர்கள்?” என்று கேட்டார். ”சுவாமிகள் உத்தரவு” என்று கூறினேன்.
“ஓ! அவரா மகத்தானவர்” என்று கூறினார்.

நான் மீண்டும் சுவாமிகளிடம் வந்தேன். புறப்படுவோம் என்று கூறியபடி மேடையை விட்டு இறங்கி வந்தார். நடக்க ஆரம்பித்தார். எனக்கு ஒரே ஆனந்தம். எங்களைத் தொடர்ந்து சிவப்பு நிறத்தில் ஒரு நாய் ஓடி வந்தது.

சுவாமிகள் நின்றார். நாயை ஏறிட்டு நோக்கினார். நாயும் நின்றது. “நான் சென்று வருகிறேன். நீ இங்கேயே இருந்து, காவல் காப்பாய்“ என்று சொன்ன மறுவிநாடி நாய் திரும்பி ஓடிவிட்டது.

நாங்கள் ரெயிலில் ஏறி அமர்ந்தோம். அதில் எங்களைத் தவிர ஏறத்தாழ 50 பேர்இருந்தனர். மதியம் 12 மணிக்கு ரெயில் புறப்பட “பெல்“ அடித்தார்கள். உடனே எங்களைத் தவிர அந்தப் பெட்டியில் இருந்த அத்தனை பேரும் மடமடவென்று இறங்கி அடுத்த பெட்டியில் ஏறிக் கொண்டனர். சுவாமிகள் மெல்ல சிரித்துக் கொண்டார். இது ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

கப்பல் வந்தது!

சுவாமிகள் என் வீட்டுக்கு வருவதாகச் சொன்ன பவுர்ணமி நாளும் வந்தது. ஒன்றரை மாதமாக தாமதமாகவே வந்து கொண்டிருந்த தனுஷ்கோடி ரெயில் அன்று வெகு சீக்கிரமாகவே வந்து விட்டது. ஏழரை மணிக்கு சுவாமிகளுக்கு பலகாரம் ஊட்டினேன். ஒன்பதரை மணிவரை சுவாமிகள் என்னிடம் எதுவுமே பேசவில்லை. எனக்கு பயமாகப் போய்விட்டது. சுவாமிகள் என்னுடன் வரமறுத்து விடுவாரோ என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது கண்களை மூடிய நிலையில் சுவாமிகள் பேசினார். ”கப்பல் வருகிறதா பார்” என்றார்.

நான் எழுந்து சென்று கிழக்குப் பக்கமாகக் கூர்ந்து கவனித்துப் பார்த்தேன். கப்பல் வந்து கொண்டு இருப்பது தொலைவில் புள்ளியாக தெரிந்தது?” கப்பல் வருகிறது சுவாமி” என்றேன்.
”சரி நீ போய் அந்தோணியார் கோவிலைச் சுற்றி வந்து பிரார்த்தித்து விட்டு வா” என்றார்.

 

பரிபூரணம்!

வீடு வந்து சேர்ந்ததும் சுவாமிகள் செயல் எனக்கு வினோதமாக இருந்தது. அவருக்கு என் துணைவியார் இலை போட்டு சாப்பாடு பரிமாறினார். சுவாமிகள் சாப்பாட்டை தமது வலது கரத்தால் 3 முறை ஆசிர்வதித்து ”பரிபூரணம்” என்று இரு முறை சொன்னார். பிறகு அந்த உணவைப் பிசைந்து எனது குழந்தைகளுக்கு ஊட்டுமாறு சைகை செய்தார்.

குழந்தைகள் சாப்பிடுவதை பார்த்து விட்டு ”பரிபூரணம்” என்று சொல்லிவிட்டு எழுந்து விட்டார். இதை எல்லாம் நாங்கள் அதிசயமாக பார்த்துக் கொண்டு இருந்தோமே தவிர விளக்கம் கேட்கத் தோன்றவில்லை.

இதை தொடர்ந்து எங்கள் வீட்டில் நல்லதும் அதிசயமும் மாறி மாறி நடக்கத் தொடங்கியது.எனது மருமகன் சஞசீவிக்கு மின்சார இலாகாவில் வேலையில் சேர ஆர்டர் வந்தது. நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். “மருமகனை வேலையில் சேர்த்து விட்டு வா“ என்று சுவாமிகள் எனக்குக் கட்டளையிட்டார்.

நானும் மாப்பிள்ளையும் சென்று திரும்ப 6 நாள் ஆகிவிட்டது. அந்த 6 நாட்களும் சுவாமிகள் ஆகாரம் எடுக்கவில்லை என்று மனைவி கூறினார். 7வது நாள் சமையல் அறையில் எனது மனைவி கஞ்சியை சுடச்சுட வடித்து வைத்து இருந்தார்.

சுவாமிகள் சமையல் அறைக்குச் சென்று ”கஞ்சியைக் கொடு” என்று கேட்டுள்ளார். ”சுவாமி கஞ்சி கொதிக்கின்றது” என்று சொல்ல கண் இமைக்கும் நேரத்தில் அந்த அதிசயம் நடந்துள்ளது. கஞ்சியை எடுத்து ”சுடச்சுட மடக்மடக்கென்று சுவாமிகள் குடித்து விட்டு காலி பாத்திரத்தைத் தரையில் வைத்தபோது மனைவி பதறிப் போய்விட்டார்.

கஞ்சி குடித்து முடித்த சுவாமிகள் என் மனைவியைப் பார்த்து ”கோடி கோடியாக இரு. நான் கோடி வருஷம் வாழ்வேன்” என்று கூறினாராம்.

நான் வீடு திரும்பியதும் மனைவி இதை என்னிடம் சொல்லி ஆச்சரியப்பட்டார். சுவாமிகளின் மகிமையை அவள் நேரடியாகத் தெரிந்து கொண்டது பற்றி எனக்கு பூரிப்பாக இருந்தது. மறுநாள் சுவாமிகள் தனுஷ்கோடிக்கு பயணமானார். ஏற்கனவே இருந்த அதே மேடையில் தவக்கோலத்தில் நிற்கத் தொடங்கி விட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY