நடிகர் பாண்டியராஜன் மகன் திடீர் கைது

0
135

தமிழ் சினிமாவில் நகைச்சுவை படங்களை இயக்கி அனைவரையும் சிரிக்க வைத்தவர் பாண்டியராஜன். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடிக்கவும் செய்துள்ளார். தற்போதும் இவர் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

பாண்டியராஜனுக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் பிரித்வி பாண்டியராஜன் மட்டும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில், பாண்டியராஜனின் இன்னொரு மகனான பிரேமராஜன் இன்று மயிலாப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குட்டி விமானம் ஒன்றை அனுமதியில்லாமல் பறக்க விட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போலீஸ் விசாரணைக்கு பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. பாண்டியராஜன் மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY