தெறி ரீமேக்கில் ஷாருக்கான்?

0
102

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘தெறி’. வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷாருக்கானை வைத்து ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ மற்றும் ‘தில்வாலே’ ஆகிய படங்களை இயக்கிய ரோஹித் ஷெட்டி ‘தெறி’யை இந்தியில் இயக்கவிருக்கிறாராம்.

இப்படத்தில் விஜய் வேடத்தில் நடிக்க தனது ஆஸ்தான ஹீரோவான ஷாருக்கானையே நடிக்க கேட்டிருக்கிறாராம் ரோஹித் ஷெட்டி. ஷாருக்கானும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. முதலில் அக்‌ஷய் குமார் தான் ‘தெறி’ இந்தி ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியானது.

ஆனால் இப்போது ‘தெறி’யின் இந்தி ரீமேக் உரிமை இயக்குனர் ரோஹித் ஷெட்டி வசம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் ‘தெறி’ ரீமேக்கில் ஷாருக்கான் தான் நடிப்பார் என்றும், 2018 ஆம் ஆண்டு இதை ரிலீஸ் செய்ய அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் பாலிவுட் திரையுலகில் கூறப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY