பேரின்பம் நல்கும் பேப்பர் ஸ்வாமிகள்

0
225

திருக்குற்றாலத்தை அடுத்த இலஞ்சியில் சுவாமிகள் தமது அருளாட்சியைத் தொடங்குகிறார்கள்.

சுவாமிகள் எப்பொழுதும் தமது கைகளில் பேப்பர் செய்தித்தாள்களை வைத்திருப்பது வழக்கம். கீ கிழிந்து கிடக்கும் தாள்களை எடுத்து அவற்றை ஒன்றாக சேர்த்து வைத்து கொள்வார்.பின்னர் அவற்றை பார்த்து வாசிப்பார். வாசித்தவை மறுநாள் நாளிதழில் தலைப்பு செய்தியாக வரும்.இவற்றை கண்ட மக்கள் வியப்புப்படைந்தனர்.
இதனாலே ஸ்வாமிகளை மக்கள் பேப்பர் ஸ்வாமிகள் என்று பயரிட்டழைத்தனர்.

இலஞ்சியில் உள்ள பெரியவர்கள்  கூறும் போது “சுவாமிகள் சுமார்  ஐந்தரை அடி உயரம் இருப்பார். ஜிப்பா சட்டையும் வேஸ்டியும் அணிவது வழக்கம்.கால்களில் பூட்ஸ்  அணிந்திருப்பர்” .

சுவாமிகள் இலஞ்சியில் அருளாட்சி செய்த காலத்தில் ஓரிதத்தில் நிலையாக இருந்தது இல்லை.சுவாமிகள் எங்கிருப்பார்,எப்போது வருவார் ,போவார் என்று யாருக்கும் தெரியாது.இலஞ்சியில் உள்ள பெருந்தெரு பிள்ளையார் கோவில் ,குன்னக்குடி பிள்ளையார் கோவில்,கீழ் இலஞ்சியில் உள்ள நாராயணஸ்வாமி கோவில்,போன்ற இடங்களில் தவமிருப்பார்கள்.

பேப்பர் ஸ்வாமிகள் மிகுந்த அருளாற்றல்  மிக்கவராக விளங்கினார் . ஸ்வாமிகள் பரிபூரணம் அடைவதற்கு முன் இறுதி 10 ஆண்டுகள்  இளையனேந்தல் ஜமீனில் இருந்தார்கள். ஜமீனில் முத்தஜமீன் ,இளையஜமீன் இருவருக்கும் ஆண் வாரிசுகள் இல்லை .ஒருமுறை ஸ்வாமிகளை வணங்கிய இளையஜமீன் நரசிம்ம அப்பா ஸ்வாமி ,தமக்கு பிள்ளை இல்லாத குறையயை மனம் உருகி சொல்ல ,சுவாமிகள் 2 கடுக்காய்களை அவரிடம் கொடுத்து உனக்கு சிம்ம லக்னத்தில் 2 ஆண் குழந்தைகள் பிறகும் என ஆசிர்வதித்தார். சொன்ன படி குழந்தைகள் பிறந்தனர்.
முதல் ஆண் குழந்தையை பெரிய பேப்பர் என்றும் ,2 வது ஆண் குழந்தையை சிறிய பேப்பர் என்றும் பெயரிட்டு ஜமீன்தார் மகிழ்ந்தார்.

 சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்களை கேட்டு கொண்டே  இருக்கலாம்.

மழையில்லாத நிலையில் மழை  பெய்வித்தது,சிறுவன் தவறுதலாக கொடுத்த நவபாஷாணத்தை சாப்பிட்டும் உயிரோடு இருந்தது, சாமிகள் கேட்டும் வைத்து கொண்டு இல்லை என்று சொன்னதால் ஊறுகாய் பானையில் பூழுவாய் ஆய்ந்தது,வறுமையில் வாடிய அன்பருக்கு அருள் பாலிந்தது ,குத்தகைக்கு எடுத்த பட்ட மரங்களை  தளிர்க்க செய்து காய்த்து குலுங்க வைத்தது. முத்து கோனார் என்பவரின் இறந்து போன  2 வயது மகனை உயிர் பெற செய்தது,ஒரே இரு இடங்களில் காட்சியளிப்பார்.

பேப்பர் ஸ்வாமிகள் வைத்தியத்திலும் சிறந்து விளங்கினார்கள். 1946 முதல் 1950 வரை தவத்தை மேற்கொண்ட சுவாமிகள் 1950 முதல் 1956 வரை மவுன தவத்தில் இருந்தார்.

தமிழ் நாட்டில் தென் பகுதியில் தமது பணி நிறைவடைவதை உணர்ந்த சுவாமிகள் தாம் ஜீவ சமாதி ஆக போவதை ஜமீன் குடும்பத்தாரிடம் கூறினார் .
14.05.1956 ம் ஆண்டு சித்திரை மாதம் 31 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாள் இரவு 1.30 திருவாதிரை நட்சத்திரத்தில் பரிபூரணம்  அடைத்தார்.

அமைவிடம்
கோவில் பட்டியில் இருந்து திருவேங்கடம் ராஜபாளையம் செல்லும் வழியில் 10 கி .மீ தூரத்தில் இளையனேந்தல் என்னும் ஊரில் உள்ள  ஜமீன்  அரண்மனையின் ஒரு பகுதியில் பேப்பர் சுவாமிகள் கோவில் உள்ளது .கிழக்கு பார்த்த சன்னதி .சிவலிங்கம் பிரதிட்டை .

NO COMMENTS

LEAVE A REPLY