மசாலா இடியாப்பம்

0
266

தேவையான பொருட்கள்:

இடியாப்பம் (உதிரியானது) – 2 கப்
வேக வைத்த நாட்டுக் காய்கறிகள் (கத்திரிக்காய், முள்ளங்கி, கொத்தவரை, காராமணி, சேனைக்கிழங்கு) – தலா 50 கிராம்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 3 டேபிள் டீஸ்பூன்
சோம்புத் தூள் – 1\2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்த மல்லி – 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 50 கிராம்
பொடியாக நறுக்கிய தக்காளி – 2
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

அலங்கரிக்க 

முந்திரிபருப்பு- 10

செய்முறை:
கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கவும்.
பிறகு தக்காளி, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

சோம்புத்தூள் தவிர மற்ற எல்லா பொடிகளையும் சேர்த்து வதக்கவும்.
காய்கறிகளை வேக வைத்த தண்¬ணீருடன் சேர்க்கவும்.
உப்பு சேர்த்து தண்¬ணீர் வற்ற நன்கு வேக விடவும்.

தண்ணீ¬ரே தெரியாமல், எண்ணெய் கக்கும் அளவுக்கு வந்ததும், இடியாப்பம்           சேர்த்துக் கிளறவும்.

குறைந்த தணலில் வைத்து, ஒரு கைப்பிடி தண்ணீ¬ர் தெளித்துக் கிளறவும் (இடியாப்பம் குளிர்ந்திருப்பதால் தண்ணீ¬ர் தெளிக்க வேண்டும்).

3 நிமிடங்களுக்கு மூடி வைத்து, மறுபடி கிளறிவிட்டு, கடைசியாக சோம்புத் தூள்  தூவிப் பரிமாறவும்.

மசாலா இடியாப்பம் ரெடி !!!!!!!!!!!!!!!!!!!!!!!

NO COMMENTS

LEAVE A REPLY