நெல்லிக்காய் சாதம்

0
159

சாதம்

நெல்லிக்காய் – 6

சாதம் – 200 கிராம்

பச்சை மிளகாய் – 4

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

பெருங்காயப் பொடி – ½ தேக்கரண்டி

உப்பு – தேவைக்கு

தாளிக்க:

கடுகு – 1 தேக்கரண்டி

கடலைபருப்பு – ½ தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு – ½ தேக்கரண்டி

கறிவேப்பிலை – சிறிதளவு

நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:

சாதத்தை எடுத்து ஒரு தட்டில் ஆறவைத்துக் கொள்ளவேண்டும். பெரிய நெல்லிக்காயை கழுவி பொடியாகத் துருவிக் கொள்ள வேண்டும்.

கொட்டையை எடுத்து விடவேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் கடுகைப் போட்டு வெடித்ததும், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் போட்டு வறுத்து சிவந்ததும், கறிவேப்பிலை, வர மிளகாய், பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு தாளிக்க வேண்டும்.

அதனுடன் துருவிய நெல்லிக்காயைப் போட்டு நன்கு கிளற வேண்டும். சிறிது நேரம் வதங்கியவுடன் (இரண்டு அல்லது மூன்று நிமிடம்) அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.

அடுப்பிலிருந்து இறக்கிய நெல்லிக்காய் கலைவையை ஆற வைத்த சாதத்துடன்சோ்த்து  கிளற வேண்டும் (சாதம் குலையாமல் கிளறவேண்டும்).

தனியாக சிறிது நெய் விட்டு அதில் பொட்டுக் கடலையை போட்டு பொன்னிறமாக வறுத்து கிளறிய சாதத்துடன் சேர்க்கவேண்டும்.

தேவைப்பட்டால் பொட்டுக் கடலையுடன், முந்திரி, நிலக்கடலை ஆகியவற்றை நெய்யில் வறுத்து கிளறிய சாதத்துடன் சோ்த்து பரிமாறலாம்.

நெல்லிக்காய் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள புதினா சட்னி செய்துச் சாப்பிட்டால் மிகுந்த சுவையாக இருக்கும்.

  • (நெல்லிக்காயைத் துருவும் போது மிகவும் பொடியாக துருவ வேண்டும். அப்படி பொடியாகத் துருவினால் சாதத்துடன் நன்றாக கலந்துவிடும்.)

இப்பொழுது சுவையான நெல்லிக்காய் சாதம் ரெடி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.

 

நெல்லிக்காயின் மருத்துவக் குணங்கள்:

  1. தினம் நெல்லிக்காயை சாப்பிட்டால் உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் இளமையாக இருக்க உதவும் டானிக்காக பயன்படும். தொற்று நோய்கள் வரவிடாமல் தடுக்கும். இருதயம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளை பலப்படுத்தும்.
  2. நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து உள்ளது ( ஒரு நெல்லிக் காயில் முப்பது ஆரஞ்சுப் பழங்களிலுள்ள வைட்டமின் சி சத்து உள்ளது).
  3. புத்தியை வளர்க்கும் பாஸ்பரஸ் சத்து அதிகமாக நெல்லிக்காயிலுள்ளது.
  4. நெல்லிக்காயில் மாவுச் சத்து-14 கி, புரத சத்து-0.4 கி, கொழுப்புச்சத்து- 0.5 கி, பாஸ்பரஸ்- 21 மி.கி, கால்ஷியம்-15 மி.கி, இரும்புச்சத்து – 1 மி.கி, வைட்டமின் பி1 28 மி.கி, வைட்டமின் சி 720,  மி.கி, நியாசின் – 0,4 மி.கி,  கலோரிகள் – 60 ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது.

இத்தகைய மருத்துவக் குணங்கள் நிறைந்த நெல்லிக்காயை அடிஅடிக்கடிச் சாப்பிட்டு வந்தால் நோயின்றி சிறப்பாக வாழலாம்.

 

NO COMMENTS

LEAVE A REPLY