ஆரஞ்சு சாக்லேட் கேக்

0
156
தேவையான பொருட்கள்:

 

1. மைதா மாவு – 250 கிராம் (சலிக்கவும்)

2. வெண்ணெய் – 250 கிராம்

3. பொடித்த சீனி – 250 கிராம்

4. முட்டை – 4 எண்ணம்

5. பேக்கிங் பவுடர் – 2 தேக்கரண்டி (சலிக்கவும்)

6. ஆரஞ்சு எசன்ஸ் – ஒரு தேக்கரண்டி

7. இளஞ்சூடான தண்ணீர் – 5 மேசைக்கரண்டி

8. ஆரஞ்சு ஜுஸ் பவுடர் – 3 மேசைக்கரண்டி

 

சாக்லேட் சாஸ் தயாரிக்க:

 

1. சிங்கிள் க்ரீம் – 120 மி.லி

2. சாக்லேட் துண்டுகள் – 250 கிராம்

 

செய்முறை:

 

கேக் தயாரிக்க:

 

1. மிருதுவான வெண்ணெயையும் பொடித்த சீனியையும் நன்கு அடித்துக் கலக்கிக் கொள்ளவும்.

2. ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கலக்கிக் கொள்ளவும்.

3. சலித்து வைத்திருக்கும் மைதா மாவை சிறிது சிறிதாக வெண்ணெய்க் கலவையில் சேர்த்துக் கொண்டே அடிக்கவும் அல்லது நன்கு கலக்கி விடவும்.

4. ஆரஞ்சு ஜூஸ் பவுடரையும், தண்ணீரையும் நன்கு கலக்கிக் கொண்டு பின்னர் ஆரஞ்சு எசன்ஸையும் சேர்த்து கலக்கவும்.

5. இந்தக் கலவையை ஓவனில் வைத்து 160 டிகிரி C-ல் 25 – 35 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

6. கேக் வெந்ததும் வெளியில் எடுத்து ஆற வைக்கவும். .

சாக்லேட் சாஸ் தயாரிக்க:

1. சிங்கிள் க்ரீமை ஒரு சிறிய பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் சூடு செய்யவும்.

2. கொதி நிலை வந்ததும் சாக்லேட் துண்டுகளைச் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

3. இளகும் சாக்லேட் துண்டுகளை கரண்டியால் நன்கு மசித்துக் கொள்ளவும்.

சாக்லேட் சாஸ் தயாரானதும் அதை ஆற வைத்திருக்கும் ஆரஞ்சு கேக் மீது சமமாகத் தடவி விடவும். சுவையான ஆரஞ்சு கேக் தயார்.

NO COMMENTS

LEAVE A REPLY