விஜய்யின் அடுத்த படத்திலும் புதிய குழந்தை நட்சத்திரம்

0
110

விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘தெறி’ படத்தில் மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்த படத்தில் அவளது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து விஜய் தற்போது தனது 60-வது படமாக நடித்து வரும் பரதன் இயக்கும் புதிய படத்திலும் ஒரு குழந்தை நட்சத்திரம் நடித்து வருகிறது.

அந்த குழந்தையின் பெயர் மோனிகா சிவா. இவள் விஜய்யின் 60-வது படம் மட்டுமில்லாது, ‘சங்கு சக்கரம்’, ‘கட்டப்பாவை காணோம்’, ஜெய் நடிக்கும் புதிய படம், சித்தார்த் நடிக்கும் புதிய படம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து வருகிறாள். துருதுருவென இருக்கும் இந்த குழந்தையின் சேட்டைகளை இவள் நடிக்கும் படங்களில் உள்ள அனைவரும் ரசித்து வருகிறார்களாம்.

‘தெறி’ படத்தில் நைனிகா விஜய்யின் மகளாக நடித்ததுபோல், இந்த படத்தில் இந்த குழந்தை விஜய்யின் மகளாக நடிக்குமா? என்று அவளிடமே கேட்டால் அதுபற்றி எதுவுமே சொல்லக்கூடாது என்று சொல்லி நம் வாயை அடைக்கிறாள்.

NO COMMENTS

LEAVE A REPLY