சிம்புவுக்கு அம்மாவாகிறார் ஸ்ரேயா!

0
103

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இந்த படத்தில் ஒரு கெட்டப்பில் நார்மலாகவும், இன்னொரு வேடத்தில் தாடி கெட்டப்பிலும், மற்றொரு வேடத்தில் 90 கிலோ வெயிட் போட்டும் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார் சிம்பு. மேலும், இதில் ஒரு வேடத்தில் சிம்பு திருமணமானவராகவும், அவருக்கு பிறக்கும் ஒரு குழந்தை இன்னொரு சிம்பு போலவும் காட்சி உள்ளதாம்.

அதனால் அந்த சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க முதலில் திரிஷாவை அழைத்தனர். ஆனால் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஓகேதான். ஆனால் இன்னொரு சிம்புவுக்கு அம்மாவாக நடிப்பதுதான் பிடிக்கவில்லை. அப்படி நடித்தால் என்னை அடுத்தடுத்து அம்மா வேடங்களுக்கு நடிக்க அழைத்து விடுவார்கள் என்று மறுத்து விட்டார்.

ஆனால் அந்த வேடத்தில் முன்னணி நடிகை ஒருவர் நடித்தால்தான் பொருத்த மாக இருக்கும் என்று பல முன்னணி நடிகைகளிடம் பேசி வந்தனர். இப்போது அந்த வேடத்துக்கு ஸ்ரேயா ஓகே சொல்லிவிட்டாராம். தற்போதைய நிலவரப்படி தமிழில் படவாய்ப்பு இல்லாத ஸ்ரேயா இது ஒரு என்ட்ரியாக இருக்கும் என்று நிக்கிறாராம். அதோடு, அவர் திரிஷ்யம் இந்தி ரீமேக்கிலும் தமிழில் கெளதமி நடித்த ரோலில் நடித்தவர். அந்த படத்தில் 16 வயது பெண்ணுக்கே அம்மாவாக நடித்த எனக்கு, இதில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை எனறு கூறினாராம்.

NO COMMENTS

LEAVE A REPLY