3 ஸ்க்ரப் உபயோகித்திருக்கிறீர்களா?

0
176

தினமும் சருமத்தில் குறைந்த பட்சம் ஆயிரம் இறந்த செல்கள் உதிர்கின்றன. புதிதான செல்கள் புதுப்பிக்கவேண்டிய அவசியம் அப்போது ஏற்படுகின்றது.

அப்போதுதான் சருமம் உயிர்ப்போடு, இளமையாக இருக்கும். ஆனால் இறந்த செல்கள் சருமத்திலேயே தங்கியிருக்கும்போது, சருமம் கடினமாகவும், பொலிவின்றியும் இருக்கும். புதிதாய் உருவான செல்களும் விரைவிலேயே பாதிப்படையும். அதற்கு நம் மாசுபட்ட சுற்றுப்புறமும் ஒரு காரணம்.

இறந்த செல்கள், உடலில் பெரும்பலான இடங்களில் வியர்வை மூலமாக வெளியேறுகின்றன. ஆனால் முகம், உதடு, பாதங்களில் அதிகமாய் வியர்க்காததால், அங்கேயே தங்கி சருமத்தை பாதிப்படைய வைத்துவிடும். எனவே முக்கியமாய் இந்த இடங்களில் ஸ்க்ரப் செய்வது மிகவும் அவசியமாகி விடுகிறது.

பாதங்களுக்கான ஸ்க்ரப் :

பாதங்களில் இறந்த செல்கள் மற்றும் கொழுப்பு படிவங்கள் தங்கி, கடினத்தன்மையை ஏற்படுத்தும். இவைகளை தினமும் குளிக்கும்போது நீக்கிவிட வேண்டும். இல்லையென்றால் வெடிப்பு ஏற்பட்டு, பாதத்தை அசிங்கமாக்கும். வலி உண்டாகும். இதற்கான இந்த ஸ்க்ரப் வாரம் மூன்று முறை உபயோகியுங்கள். பாதத்தில் வெடிப்பு மறையும். பட்டுப் போன்று மென்மையான பாதம் கிடைக்கும்.

தேவையானவை :

உப்பு – 5 டீ ஸ்பூன்
பாதாம் எண்ணெய் – கால் கப்
லாவெண்டர் எண்ணெய் – 3 துளிகள்.

இவற்றை நன்றாக கலக்கி, பாதங்களில் தேய்த்து, 10 நிமிடங்கள் ஊற விடுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். பாதங்களில் வெடிப்பு மறைந்து மென்மையாகும்.

3 amazing scrubs for a healthy complexion

பளபளப்பான முகத்திற்கான ஸ்க்ரப் :

முகத்தில்தான் அதிகப்படியான அழுக்குகள், தூசி ஆகியவை ஏற்படுகின்றன. அவை சருமத்தை பாதிக்கச் செய்து, முகப்பரு, என்ணெய் வடிதல், சுருக்கங்களை தந்துவிடும். இதனால் கட்டாயம் வாரம் இருமுறையாவது ஸ்க்ரப் செய்ய வேண்டியது அவசியம்.

தேவையானவை :

ஓட்ஸ் – அரை கப்
தேங்காய் எண்ணெய் – கால் கப்

சீமை சாமந்தி டீத்தூள் – ஒரு ஸ்பூன்

மேலே சொன்னவற்றை எல்லாம் ஒன்றாக கலந்து , முகத்தில் தேய்க்கவும். மெதுவாய் சில நிமிடங்கள் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரம் இரண்டு முறை செய்தால் சரும பிரச்சனைகள் வராது. முகம் பளபளக்கும். மென்மையான சருமம் கிடைக்கும்.

3 amazing scrubs for a healthy complexion

உதட்டு ஸ்க்ரப் :

உதடு வறண்டு போய், வெடிப்பாக இருக்கிறதா? கருத்து காணப்படுகிறதா? அப்படியெனில் இந்த ஸ்க்ரப் மிகவும் உதவியாக இருக்கும். இவை உதட்டில் உள்ள இறந்த செல்களை அகற்றி, கருமையை போக்கச் செய்யும். மேலும் ஈரப்பத்தை தக்க வைக்கும்.

தேவையானவை :

சர்க்கரை – 1 டீ ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – அரை ஸ்பூன்
பெட்ரோலியம் ஜெல்லி – 1 ஸ்பூன்

3 amazing scrubs for a healthy complexion

மேலே கூறியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனை ஒரு சிறிய டப்பியில் வைத்து, தினமும் இரவு தூங்கும் முன், உதட்டில் தேய்க்கவும். சில நிமிடங்கள் கழித்து, ரோஸ் வாட்டரில் துடையுங்கள். இவ்வாறு செய்தால் வித்தியாசம் காண்பீர்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY