உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடித்த ஷாரூக்கான்

0
77

அமெரிக்க வணிக பத்திரிகையான போர்ப்ஸ், சர்வதேச அளவில் அதிக சம்பளம் வாங்கும் 100 பிரபலங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 2015 ஜூன் முதல் 2016 ஜூன் வரையிலான காலத்தில் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 100 நபர்களின் மொத்த சம்பளம் 510 கோடி டாலர் என அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

போர்ப்ஸ் பட்டியலில், அமெரிக்க பாடகரான டெய்லர் ஸ்விப்ட் ஆண்டுக்கு 17 கோடி டாலர் சம்பளத்துடன் முதலிடத்தில் இருக்கிறார். அடுத்து, பாப் பாடகர்கள் குழுவான ஒன் டைரக்‌ஷன் 11 கோடி டாலரை ஆண்டு ஊதியமாக வாங்கி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

நூலாசிரியர் ஜேம்ஸ் பேட்டர்சன் மூன்றாவது இடத்திலும், கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்காவது இடத்திலும் உள்ளனர். கூடைப்பந்து விளையாட்டு வீரர் லீபிரான் ஜேம்ஸ், இசைக்கலைஞர் மடோனா ஆகியோர் முறையே 11 மற்றும் 12-வது இடங்களில் இருக்கின்றனர்.

இந்தி நடிகர் ஷாருக்கான் 3.30 கோடி டாலர் சம்பளத்துடன் 86-வது இடத்தைப் பிடித்துள்ளார். மற்றொரு இந்தி நடிகரான அக்‌ஷய் குமார் கடந்த 2015-ஆம் ஆண்டில் 76-வது இடத்தில் இருந்தார். தற்போது 94-வது இடத்திற்கு சென்றுள்ளார். இவருடைய சம்பளம் 3.15 கோடி டாலராகும்.

NO COMMENTS

LEAVE A REPLY