கொடி படத்தில் வயதான தோற்றத்தில் தனுஷ்?

0
176

‘எதிர்நீச்சல்’, ‘காக்கிசட்டை’ ஆகிய படங்களை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘கொடி’. இப்படத்தின படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. ‘கபாலி’ படத்தின் ரிலீசுக்கு பின்னர் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்த படத்தில் தனுஷ் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அண்ணன்-தம்பிகளாக நடித்து வந்ததாக கூறப்பட்டு வந்தநிலையில், தற்போது அப்பா-மகனாக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தனுஷ் இந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் வயதான தோற்றத்தில் நடித்திருப்பதாக அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து படக்குவினர் யாரும் உறுதி செய்யவில்லை.

இப்படத்தில் திரிஷா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் தனுஷின் காட்பாதராக இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை தனுஷ் தயாரித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY