“குற்றம் கடிதல்” இயக்குனருடன் இணையும் ஜோதிகா

0
146

பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தரமணியில் தொடங்கப்பட்டு இருக்கிறது.

பிரம்மா இயக்கத்தில் வெளியாகி தேசிய விருதை வென்ற திரைப்படம் ‘குற்றம் கடிதல்’. அப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பிரம்மா தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

முழுக்க பெண்கள் பிரச்சினைகளை அலசும் படமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் பிரம்மா. இப்படத்தின் பிரதான வேடத்தில் ஜோதிகா நடிக்க ஒப்பந்தமானார். ஜோதிகா மற்றும் அவரோடு நடிக்கும் படக்குழுவினருக்கு நடிப்புப் பயிற்சி அளித்து வந்தார் பிரம்மா.

நடிப்பு பயிற்சி முடிந்து, இப்படத்தின் படப்பிடிப்பு தரமணியில் இன்று முதல் தொடங்கப்பட்டு இருக்கிறது. சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் கிரிஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறார்கள். ஜோதிகாவோடு லிவிங்ஸ்டன், நாசர், ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது.

’36 வயதினிலே’ படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் தான் நடித்து வருகிறார் ஜோதிகா. படப்பிடிப்பு தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா “ஜோதிகா தனது அடுத்த படத்தை அற்புதமான படக்குழுவினரோடு தொடங்கி இருக்கிறார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY