பாடைகட்டி வலங்கைமான் மாரியம்மன்

  0
  323

  அம்பாள் பெயர்:

      இந்த தலத்தில் வீற்றிருக்கும்  அம்பாளின் பெயர் “வலங்கை மாரியம்மன்” என்ற பெயரோடு வீற்றிருக்கிறார்.

  கோவில் சிறப்பு:

        இந்த திருகோவில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது ஆகும். இந்த திருகோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற வேண்டுதல் பாடைகட்டி நேர்த்திகடன்.

  T_1024_1733

  கோவிலின்  பெருமை:

         இந்த கோவிலில் வந்து வழிபடுபவர்களுக்கு கண் நோய் , திருமணத்தில் வந்த தடை  மற்றும் அம்மை நோய் தாக்கியவர்கள் இங்கு வந்து நன்மை பெற்று இந்த நோயினை தீர்த்து கொள்வர்.

  தல வரலாறு:

       ஒரு பிராமண குடும்பம் ஒன்று ஐயநார் கோவில் வழியாக செல்லும் போது வழியில் தன் பெண் குழந்தையை தவற விட்டனர். அந்த குழந்தை வழி தெரியாமல் அழுதது . அதனை கண்ட ஒருவர் அந்த குழந்தையை வளர்க்க  தொடங்கினர்.

       ஒரு நாள் அந்த குழந்தைக்கு அம்மை  நோய் தாக்கியது. அந்த அம்மை நோய் தங்க முடியாமல் அந்த குழந்தையின் உயிர் பிரிந்தது. அப்போது அந்த குழந்தையின்  சடலத்தை  தனது தோட்டத்தின் கொல்லையில்  குழந்தையின் சடலத்தை புதைத்தார்.

       தினமும் அந்த புதைத்த  இடத்தில் தினமும் விளக்கு ஏற்றி , உணவு நைவேத்தியம் செய்து வழிபட துவங்கினர். அவர் மிகவும் மகிழ்ச்சியாக  உணரப்பட்டார்.அதனை கண்ட அந்த ஊர் மக்கள் அனைவரும் அந்த சமாதிக்கு பூஜிக்க துவங்கினர்.

          அந்த சமாதிக்கு பூஜை செய்யும் மக்கள் அனைரும் மிகவும் குளிர்ச்சியை உணர துவங்கினர். ஆதலால் அந்த சமாதியில் உள்ள பெண்ணிற்கு சீதளா தேவி என்று பெயர்  இட்டனர்.

       சீதளம் என்றால் குளுமை என்று பொருள். பூஜை செய்யும் அனைவரும் ஒரு கால கட்டத்தில்  மிகுந்த மகிழ்ச்சி உற்று  காணப்பட்டனர். பிறகு அந்த சமாதியில் உள்ள பெண் தெய்வம் காலபோக்கில் சீதளா தேவி  (வலங்கை மான்) அம்பாள் என்று அழைக்கபடுகிறாள் .

  ஸ்தல புராணம்:

      தட்சன்  என்பவன் சிவ பெருமானிடம் தனக்கு பிறக்க போகும் மகள் பார்வதி தேவியாக இருக்க வேண்டும் என்று வேண்டினர். அதே போலவே அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சிவ பெருமான் ஆணையிட்டார். அப்போது சிவ பெருமானை சக்தி மணம் முடித்தார். அப்போது செய்த யாகத்தில்  பார்வதி தேவி  யாகத்தில்  குதித்தார். உடனே அவரது முகம் தீயில்  கருகியதால் மக்களை காப்பாற்ற வேண்டி மஹா விஷ்ணு  சிவா பெருமானை துதிக்க சிவனும் பார்வதி தேவியை  பல இடங்களில் அமர்ந்து  தியானம் செய்யும் படி ஆணையிட்டார்.

  அப்படி அமர்ந்த கோவில் தான் வலங்கைமான் கோவில் ஆகும் .

  வேண்டுதல்கள்:

      இந்த கோவிலில் குறிப்பாக பாடைகட்டி எனப்படும் வேண்டுதல் மிகவும் பிரசிடி பெற்றது ஆகும். ஒருவர் இறந்தவர் போல் பாடையில் படுக்க வைத்து  அவருடைய மகன் தீச்சட்டி எடுத்து செல்வர்.

  download (3)

      பாடையில் படுத்துள்ள அவரின் மனைவி கையில் வேப்பிலை கொத்து எடுத்து செல்ல வேண்டு. பிறகு அவரின் மகன் படுக்க வேண்டும். முதலில் பாடையில் படுதிருண்டவர் தீச்சட்டி எடுக்க வேண்டும். இதுவே இந்த கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற வேண்டுதல் ஆகும். பாடைகட்டி வேண்டுதலில் படுத்திருப்பவரை இந்த அம்பாள் காப்பற்றுவதாக ஐதீகம்.

  கோவில் அமைப்பு:

      இந்த கோவிலில் குழந்தைகளை காப்பாற்றும் பேச்சி அம்மன், இருளன், விநாயகர், ஊரை காப்பாற்றும்  மதுரை வீரன் ஆகியோர் உள்ளனர்.

  சிறப்பு பூஜைகள்:

      இந்த கோவிலில் திருவிழாக்கள் ஆவணி ஞாயிறு அன்று சிறப்பு பூஜை நடைபெறும். மேலும் அனைத்து ஞாயிறுஅன்றும் பல சிறப்பு பூஜைகள் உண்டு.

  நடை திறக்கும் நேரம்:

      இந்த கோவில் காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிம் அதே போல் மாலை ஐந்து  மணி முதல் எட்டு மணி வறையிலும்  இயங்கும்.

  அமைவிடம்

  இந்த ஊர் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலும், மன்னார் குடியிலும் பேருந்துகள் நிறைய உள்ளது.

  NO COMMENTS

  LEAVE A REPLY