ஊத்தப்பம்

0
239

தேவையான பொருள்கள்:

இட்லி மாவு – 2 கப்
ரவை – 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – 2
கேரட் – 1
குடமிளகாய் – 2
தக்காளி – 2
பச்சைப் பட்டாணி – 1/4 கப்(உரித்தது)
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிது
உப்பு – 1/2 டீஸ்பூன்
சீஸ் – துருவியது (விரும்பினால்)

தாளிக்க

நெய் அல்லது எண்ணை,

கடுகு,

சீரகம்,

பெருங்காயம்,

கறிவேப்பிலை.

செய்முறை:

 • அதிகம் புளிக்காத இட்லி மாவில் உப்பு, ரவையைக் கலந்துகொள்ளவும். ரவை மொறுமொறுப்பைக் கொடுக்கும்.
 • வெங்காயம், குடமிளகாய், தக்காளியை மெல்லிய, நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
 • கேரட்டை பெரிய அளவில் துருவிக் கொள்ளவும்.
 • பச்சை மிளகாயை பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்க .
 • வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நெய் அல்லது எண்ணையைச் சூடாக்கி, கடுகு, சீரகம் பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து மாவில் சேர்க்கவும்.
 • நறுக்கிய காய்கறிகள், பட்டாணி, கொத்தமல்லித் தழையை ஒன்றாகக் கலந்துகொள்ளவும்.
 • தோசைக் கல்லில் மாவை கனமாகப் பரத்தி, அதன்மேல் காய்கறிக் கலவையில் சிறிது தூவி சுற்றி நிறைய எண்ணை விட்டு, மூடிவைக்கவும்.
 • குறைந்த சூட்டில் வெகு நிதானமாக வேக வேண்டும். மூடிவைப்பதால் மேல்பகுதி காய்கறிகளும் பாதி வெந்து மாவோடு ஒட்டியிருக்கும். திருப்பும்போது பிரச்சினை தராது.
 • 3 அல்லது 4 நிமிடங்கள் கழித்து மெதுவாகத் திருப்பிப் போட்டு, மீண்டும் சுற்றி எண்ணை விடவும்.
 • இந்தப் பக்கத்தையும் 3 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் மூடி வேகவைத்து, திருப்பிப் போட்டு, மூடியில்லாமல் ஒரு நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
 • அதீதப் பொறுமையும், பொழுதைப் போக்க கையில் ஒரு புத்தகமும் இருந்தால் சமாளிக்கலாம். அநேகமாக காலை 4.30 மணிக்கு கூள மாதாரி படித்து இலக்கியம் வளர்த்தது நானாகத் தான் இருக்கும்.

குறிப்பு

* மேலே அங்கங்கே தக்காளி கெட்சப் போட்டு, துருவிய சீஸ், மிளகுத் தூள் (அல்லது பீட்ஸா மசாலா)தூவினால் பீட்ஸாவிற்கு கொஞ்சமும் குறைச்சலில்லாமல் இருக்கும்.

* காய்கறிகளை மொத்தமாக மாவில் கலந்தும் செய்யலாம். இது செய்வது சுலபம்.

* முதலில் செய்பவர்கள் கொஞ்சம் சிறிய சைஸ் ஊத்தப்பங்களாக முயற்சி செய்யலாம்.

* அதிகம் எண்ணைவிட்ட அந்த மொறுமொறுப்பான ஊத்தப்பம் கனமான இரும்பு தோசைக் கல்லிலேயே சாத்தியம்.

 

NO COMMENTS

LEAVE A REPLY