குழந்தை வரம் கிடைக்க கோகுலாஷ்டமி

  0
  348

  பகவான் மகா விஷ்ணு பூமி பாரம் குறைப்பதற்காகவும் நல்லவர்களைக் காப்பதற்காகவும் ஆவணி மாதத்தில் நடு இரவில் தேய்பிறை அஷ்டமி திதி உள்ள நாளில் ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் எடுத்தார். இந்தியா முழுவதும் இந்த விழாவானது கோகுலாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி என்று பலவிதமான பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

  கோகுலாஷ்டமி தினத்தன்று கிருஷ்ண பகவானை வழிபடுபவர்களுக்கு சந்தான பாக்கியம் ஏற்படும். இந்த நாளில் குழந்தை கிருஷ்ணர் நம்மைத் தேடி வருவதன் அடையாளமாக சின்னஞ்சிறு பாதத்தை வீட்டு வாசலில் இருந்து பூஜையறை வரை கோலமாக வரைவது வழக்கம். கிருஷ்ணன் கோவில்களில் உறியடித்தல் வழுக்குமரம் ஏறுதல் போன்ற விளையாட்டுகள் நடைபெறும்.

  ஸ்ரீஜெயந்தி

  ஸ்ரீஜெயந்தி என அழைக்கப்படும் இந்த நாள் ஆவணி மாதத்தில் சிம்மம் ராசியில் சூரியன் இருக்கும் சமயம் அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் கூடிய நாளான இந்த தினம் ஸ்ரீஜெயந்தி தினமாகும் இந்த தினம் ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதரித்த தினமாக கொண்டாடப் படுகிறது.

  ஸ்ரீ பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி :

  வைணவ ஆகமங்களில் பாஞ்சராத்ரம் வைகானசம் என்னும் இரண்டு விதமான ஆகமங்கள் உண்டு. ஆகமங்கள் என்பது ஆராதனை முறைகளாகும். பாக்ன்சராத்ர ஆகமம் என்பது பத்ரிகாஸ்ரமத்தில் பகவான் விஷ்ணு தானே நரனும் நாராயணனுமாகி நாராயணன் நரனும்மு உபதேசித்த பூஜை முறைகளாகும், இந்த பூஜை முறை ஐந்து ராத்திரிகளில் சொல்லப்பட்டதால் பாஞ்சராத்ரம் என்று பெயர் பெற்றது. வைகானச ஆகமம் என்பது பகவான் விஷ்ணு தானே வகானச முனிவராகி சௌனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்ததாக கூறப்படுவதால் இந்த ஆகமம் வைகானச ஆகமம் என்று கூறப்படுகிறது.

  பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி :

  பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி என்பது ஆவணி மாதம் சிம்மத்தில் சூரியன் இருக்கும் சமயம் கிருஷ்ணபட்சம் அஷ்டமியன்று கொண்டாடப்படும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஆகும். இன்று சூரிய உதயத்தில் சப்தமி அல்லது கிருத்திகை நட்சத்திரம் சம்பந்தம் ஒரு வினாடி இருந்தாலும் அது தோஷமுள்ள நாளாக கருதப்படுவதால் மறுநாள் தான் ஸ்ரீஜெயந்தியாக கொண்டாடப்படவேண்டும். மேலும் சூரிய உதயத்தில் அஷ்டமி ரோகிணி ஆகியவை இல்லாதிருந்தாலும் அன்றே பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி ஆகும்.

  ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விரதம்

  ஸ்ரீ வைகானச ஸ்ரீஜெயந்தி ஆவணி மாதம் சிம்மத்தில் சூரியன் இருக்கும் சமயம் நடு இரவில் ரோகிணி இருக்கும் சமயம் வைகானச ஸ்ரீஜெயந்தியாகும் அன்று தேய்பிறை அஷ்டமி அர்த்தராத்திரிக்கு முன்பு சிறிதளவு இருந்தாலும் போதுமானது. இவ்வாறு பலவகையிலும் பலவித ஆச்சாரியார்களின் வழிகாட்டுதலின்படி பலவிதமான நாட்களில் பலவித பெயர்களில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

  கிருஷ்ணஜெயந்தியன்று காலை லட்சுமியின் அம்சமான பசுவுக்கு உணவளிக்கவேண்டும். பூஜை அறையில் கண்ணன் படம் அல்லது விக்கிரகம் வைத்துஅலங்காரம் செய்து, இருபுறமும் குத்துவிளக்கேற்றி, நடுவே பூஜைப்பொருட்களான தேங்காய், வெற்றிலைப் பாக்கு, பூ, பழம் வைக்க வேண்டும். கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார்இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று அவருக்கு மிகவும் பிரியமான பால், தயிர்,வெண்ணெய், அவல், நாவற்பழம், கொய்யாபழம், விளாம்பழம், வாழைப்பழம்போன்ற பழங்கள் மற்றும் வெண்ணெய் சர்க்கரை கலந்த நவநீதம் என்னும்கலவையை நிவேதனமாகப் படைக்க வேண்டும் வெல்லச்சீடை, உப்பு சீடை,முறுக்கு, லட்டு, மைசூர்பாகு, தேன்குழல், மனோகரம், திரட்டுப்பால், பர்பிபோன்றவற்றையும் படைக்கலாம்.

  அன்று காலையில் இருந்து ஸ்ரீமந் பாகவதம், கிருஷ்ணாஷ்டகம், கிருஷ்ணன்கதைகள் படிக்க வேண்டும். துவாதச மந்திரமான ஓம் நமோ பகவதேவாசுதேவாய என்னும் மந்திரத்தை 108 முறை ஜெபித்து, மலர்களை அவரதுபடத்திற்கு தூவ வேண்டும். தூப தீபம் (பத்தி, கற்பூர ஆரத்தி) காட்ட வேண்டும்.பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும்பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்கவேண்டும். இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும்,உள்ளத்திற்கும் கிடைக்கும். கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ணஜெயந்தி பூஜை செய்வார்கள். வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்துமுடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனைவணங்கி, அங்கு நடத்தும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் ஆகியவற்றைக் கண்டுமகிழ்வது சிறப்பு.

  கிருஷ்ண ஜெயந்தியன்று தன்னை அழைக்கும் பக்தர்களின் வீட்டிற்கு கண்ணன்வருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை,  எனவே கிருஷ்ண ஜெயந்தியன்று,வீட்டைச் சுத்தப்படுத்தி, அலங்கரித்து, குழந்தை கண்ணனை வர வேற்கும்விதத்தில்,  வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரையில், சின்னக்கண்ணன்நடந்து வருவது போல், அவனது பாதச்சுவடுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்ரீகிருஷ்ணபாதம் கூறிக்கொண்டே மாக்கோலமிட்டு வரவேற்கலாம்.  இதனால்,கண்ணனே நேரில் நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம். ஆயர்பாடியில்கண்ணனை வரவேற்க சித்திரகோலம் (ரங்கோலி), மலர் அலங்காரம்,பூக்கோலம் இடுவர். அதை நமது இல்லங்களிலும் செய்து கிருஷ்ணரைவரவேற்க வேண்டும். இதனால் கண்ணனே தன் திருப்பாதங்களைப் பதித்துநடந்து வந்து, பூஜை அறையில் நாம் வைத்துள்ள நைவேத்திய பட்சணங்களைஏற்றுக்கொள்கிறார் என்பதாகும்.
  கண்ணனின் லீலைகளை தேவர்களும் செய்ய முடியாது. கிருஷ்ணன்தேவர்களுக்கும் தேவன்.  ஒரு கோபி தயிர், பால், வெண்ணெய் விற்கப் புறப்பட்டாள். கண்ணன் மீதுள்ள அன்பில் தன் உணர்ச்சி யையும் இழந்துவிட்டாள். அதனால்,  வாங்கலையோ தயிரு என்று சொல்ல மறந்துவிட்டாள். அவள்புத்தியில் மாதவன்  குடிகொண்டிருந்ததால்,  வேண்டுமா? கோவிந்தன்வேண்டுமா? என்று முழங்கிவிட்டாள். சூதுவாது தெரியாத கோபி பதினான்குஉலகிற்கும் நாதனாகிய கண்ணனைப் பானையில் எடுத்து வந்து, கண்ணன்அன்பில் தன்னையும் மறந்து, அவ்வளவு ஆழ்ந்திருந்தாள்! என்னசொல்லுகிறோம் என்ற உணர்ச்சியே அவளுக்கு இல்லை. கண்ணன் காதில் இதுவிழுந்தது. உடனே அவன்,  இவள் பொல்லாதவள். என்னையே விற்கப்புறப்பட்டுவிட்டாளே! என்று நகைத்தான். அந்தக் கோபி சென்ற வழியில்கண்ணன் தோன்றி னான்.

  அவளிடம்,  நான் கோகுல அரசன். எனக்குவெண்ணெய் தா என்றான். அன்பு மிகுதியால் சில சமயங்களில் குறும்புசெய்யத் தோன்றும். கோபியின் இருதயத்தில் அன்பு ததும்பியிருந்தது. அவள்கண்ணனைக் கோபமூட்டுகிறாள்.  நீ எப்படி கோகுலத்தின் ராஜா? கோகுலத்தின்அரசன் பலராமனல்லவா? நான் அவனுக்குத்தான் வெண்ணெய் கொடுப்பேன்.உனக்குக் கிடையாது. நந்தகோபன் இந்தக் கரிக்கண்ணனை எங்கிருந்துதான்தூக்கி வந்தாரோ! நந்தபாபா எவ்வளவு சிவப்பு? நீ வெறும் கரி! என்றுவேண்டுமென்றே சீண்டினாள்.

  கண்ணன் கோபியின் புடைவையைப் பிடித்துக்கொண்டிருக்கிறான். அவள்,  என்னை விடுடா, நான் போகணுமடா. என் பால்,தயிர் எல்லாம் சிந்திக் கொட்டிப் போகும். என் மாமியார் என்னைக் கோபிப்பாள்என்றாள். கண்ணன் விடவில்லை. கோபி ஒரு மோதுமோதி புடைவையைவிடுவித்துக் கொண்டு புறப்பட்டு விட்டாள். சற்று தூரம் போய்த் திரும்பிப்பார்த்தாள். கண்ணன் கோபம் கொண்டு நிற்கிறான். அவளுக்குத்தாங்கவில்லை. ஓடிவந்து,  உனக்கு வெண்ணெய் கொடுக்கிறேண்டா, கற்கண்டுகொடுக்கிறேன். என் தவறை மன்னித்துவிடப்பா என்கிறாள். கண்ணன், ஒன்றுமே வேண்டாம், போ என்றதும், திரும்பி அவள் புறப்பட்டுச் செல்கிறாள்.சற்று தூரம் சென்றதும் கண்ணன் ஒரு கல்லைத் தயிர்ப் பானை மீது எறிந்தான்.பானை உடைந்துவிட்டது.

  இந்த மாதிரி லீலை வேறு எந்தத் தெய்வமாவது செய்ய முடியுமா?ஸ்ரீகிருஷ்ணன்,  எல்லோ ருடைய கணவன் என்றும் சொல்லுகிறான். கண்ணன்உடனே வீடு திரும்பி, ரொம்ப அமைதியுடன் யசோதையின் மடியில் ஒளிந்துகொண்டான். சற்று நேரத்தில் அந்த கோபியும் வந்து சேர்ந்தாள். அவள்பாலகிருஷ்ணனைப் பற்றிக் குற்றம் சொன்னாள்.   குழந்தைக்கு ரொம்பவும்செல்லம் தருகிறீர்கள். அதனால்தான் அவன் இத்தனை வம்பு செய்கிறான்.இன்று அவன் என் தயிர்ப் பானையை உடைத்து, என் துணிகளைப்பாழாக்கிவிட்டான்.

  தயிர் கொட்டி வீணாகப் போயிற்று என்றாள். பாலன், அவளைப் போகச் சொல்லு. எனக்குப் பயமாக இருக்கிறது. அவள் போகட்டும்,பிறகு நான் உன்னிடம் உண்மையைச் சொல்கிறேன் என்றான்.  பிறகு,  அந்தகோபி ஒரு பெரும் லோபி. இரண்டு மூன்று நாளாகப் புளித்து, கெட்டுப் போனபழைய தயிரை விற்க எடுத்து வந்திருந்தாள். அவள் இவ்வளவு மோச மானதயிரை விற்கக் கொண்டு போவது நல்லதா, சொல்லு. யாராவது ஏழைஎளியவர் அதை வாங்கிச் சாப்பிட்டு நோய் வந்தால்…? அதற்கா கவே நான்அவள் தயிர்ப் பானையை உடைத் தேன். நான் ஆரோக்கிய பிரசார மண்டலத்தின்தலைவன் அல்லவா….? என்கிறான். யசோதை அந்த கோபியை அழைத்து, இம்மாதிரி கெட்டுப் போன தயிரை விற்கலாமா? என்று கடிந்து அதட்டினாள். கோபி உடனே சிரித்தாள்.

  கிருஷ்ணன் பேச்சில் கை தேர்ந்தவன்தான்! என்றாள்.தயிர்ப் பானையை உடைத்தாலும் கிருஷ்ணன் மீது அவள் குறைப்படவில்லை.வழியே போய்க் கொண்டிருக்கும் பெண்ணைப் பிடித்து இழுத்து, தயிர்ப்பானையையும் உடைக்கக்கூடிய வேறு தெய்வம் ஏதேனும் உண்டா? மற்றவர்கள்,  இம்மாதிரி செய்தால் நமக்கு அடி கிடைக்கும் என்றுஅஞ்சுவார்கள்.  யாரும் பூஜை செய்து உபசாரம் செய்ய மாட்டார்கள் என்றும்சொல்வார்கள்.

  ஸ்ரீகிருஷ்ணனுடைய இனிமையான லீலைகள்தெய்விகமானவை. மிக அற்புதமானவை.மற்ற தெய்வங்கள் தங்கள் கையில்அஸ்திர, சஸ்திர, ஆயுதங்கள் ஏந்திக் காட்சி தருகிறார்கள். ஒருவர் கையில்சுதர்சனம் இருக்கிறது. இன்னொருவர் கையில் அம்பும் வில்லும் இருக்கின்றன.மற்றொருவர் கையில் திரிசூலம்.  கண்ணன் கையில் ஆயுதமே கிடையாது.அவன் ஒரு கையில் புல்லாங்குழலும், ஒரு கையில் வெண்ணையும்,கற்கண்டும்தான் வைத் திருக்கிறான். அந்த தெய்வம் நம் அனைவரையும்காக்கட்டும்.

  எட்டு வகை கிருஷ்ணர்கள்

  ஸ்ரீகிருஷ்ணன் எட்டு வகையாக உருவகப்படுத்தி வணங்கப்படுகிறார்.

  1. சந்தான கோபால கிருஷ்ணன்: யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.
  2. பாலகிருஷ்ணன்: தவழும் கோலம். ஆலயங்களில் கிருஷ்ணன் சன்னதிகளிலும் பலரது வீட்டில் பூஜை அறையிலும் இப்படத்தையே காணலாம்.
  3. காளிய கிருஷ்ணன்: காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணன்.
  4. கோவர்த்தனதாரி: கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.
  5. ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்): வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.
  6. முரளீதரன்: கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.
  7. மதனகோபாலன்: அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் கிருஷ்ணன்.
  8. பார்த்தசாரதி: அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.

  கிருஷ்ண ஜன்மாஷ்டமி:

  ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற விழாவாகும். பொதுவாக சிவராத்திரியானது சிவனுக்கு சிறப்பாகும், நவராத்திரி அம்பாளுக்கு விசேஷம், ராமநவமி ராமர் பெயரில் இருக்கிறது. கந்த ஷஷ்டி சுப்ரமண்யருடைய பெயரில் இருக்கிறது. ஆனால் கிருஷ்ணருக்கு மட்டும் அவருடைய பெயரில் இல்லாமல் அவர் பிறந்த இடமான கோகுலத்தை வைத்து, அவர் பிறந்த திதியான அஷ்டமியை வைத்து கோகுலாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. ஏனெனில், கிருஷ்ண பகவான் முழுவதுமே ஈஸ்வர ஸ்வரூபமாக அவதரித்தவர். மற்றவர்களெல்லாம் அம்சாவதாரம் என்று சொல்லுவார்கள். முழுமையான அவதாரமாக கிருஷ்ண பகவானை கருதுவதால் அவர் பிறந்த இடத்தையும், திதியையும் வைத்து மரியாதையுடன் கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.

  ஸ்ரீ ஜெயந்தி வரலாறு

  கோகுலாஷ்டமியை ஸ்ரீ ஜெயந்தி என்றும் சொல்லுவார்கள். காரணம் லட்சுமியை பிரதானமாக வைத்துக்கொண்டு ஜயந்தி கொண்டாடும்போது ஸ்ரீஜயந்தி என்று வைஷ்ணவர்கள் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். மற்ற அனைவரும் பொதுவாக கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறார்கள்.
  மதுராவில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து, துவாரகையிலே ராஜ்ய பரிபாலனம் செய்து பன்னிரெண்டு ஜோதிர்லிங்க ஷேத்திரங்களில் ஒன்றான சோமநாத் ஷேத்திரத்தில் பிரதாபபட்டம் என்ற இடத்தில் தன்னுடைய கடைசி காலத்தில் இருந்துகொண்டு வைகுண்டம் சென்றதாக வரலாறு சொல்லுகிறது.

  பகவான் நாமம் பாடுங்கள்

  நமக்கு பிறந்த நாளிலே நாமெல்லாம் விசேஷமாக கொண்டாடிக் கொள்கிறோம். மற்றவர்களின் காரியங்களை விட்டுவிடுகிறோம். அப்படி இருக்கும்போது உலகிலுள்ள லௌகீக காரியங்களை செய்யாமல் ஈஸ்வர காரியங்களை செய்ய வேண்டுமென்பதற்காகத்தான் அன்றைய தினம் மற்ற காரியங்களேதும் செய்யாமல் பகவானைப் பற்றிய பக்தி, பஜனை, கீர்த்தனம், உபவாசம் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று காலையில் இருந்து ஸ்ரீமத் பாகவதம், கிருஷ்ணாஷ்டகம், கிருஷ்ணன் கதைகள் படிக்க வேண்டும். துவாதச மந்திரமான ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் மந்திரத்தை நூற்றியெட்டு முறை ஜெபித்து, மலர்களையும் பழங்களை இனிப்பு வகைகளையும் அவருக்கு படைத்து தூப தீபம் (மணமிக்க ஊதுபத்தி, கற்பூரம் ஆரத்தி) காட்ட வேண்டும்.

  பலன்

  பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும். இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும். கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள். வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி, அங்கு நடத்தும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் ஆகியவற்றைக் கண்டு மகிழ்வது சிறப்பு. கிருஷ்ண ஜெயந்தியன்று பிள்ளை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால், அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்னும் நம்பிக்கை உள்ளது.

  NO COMMENTS

  LEAVE A REPLY