சூர்யாவின் எஸ்-3 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

0
123

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘எஸ்.3’. சூர்யா – ஹரி கூட்டணியில் உருவான ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக முந்தைய இரண்டு பாகங்களிலும் நடித்த அனுஷ்கா நடித்து வருகிறார்.

மேலும், ஸ்ருதிஹாசன், தாகூர் அனுப் சிங் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இப்படத்திற்கான அறிமுக பாடலை ஹாரிஸ் ஜெயராஜ் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இன்று மாலை 5 மணிக்கு இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கப்போவதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

அதன்படி, வருகிற டிசம்பர் 16-ந் தேதி ‘எஸ்-3’ படத்தை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விரைவில் இப்படத்தின் ஆடியோவையும், டிரைலரையும் வெளியிடவுள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY