டிசம்பர் முதல் தேதியில் வெளியாகும் சைத்தான்

0
100

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘சைத்தான்’. இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி என்ற புதுமுகம் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் டீசர், டிரைலர்கள் ஆகியவை வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் 10 நிமிட காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது.

10 நிமிட காட்சியில் ஜெயலட்சுமி டீச்சர் என்ற கதாபாத்திரம் சொல்லப்படுகிறது. அந்த ஜெயலட்சுமி டீச்சர் யார் என்பதை காட்டவே இல்லை. முன் ஜென்மத்தில் ஜெயலட்சுமி டீச்சர் துரோகம் செய்து கொலை செய்ததாகவும், இந்த ஜென்மத்தில் அவளை கொலை செய்யப்போவதாகவும் காட்டப்படுகிறது.

அப்படியென்றால், இந்த படம் பூர்வஜென்ம கதையாக இருக்குமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 10 நிமிட காட்சிகளும் மிகவும் அழகாக படமாக்கப்பட்டுள்ளது. டைட்டில் கார்டு போடும் சமயத்தில் வரும் பின்னணி இசையும், அதைத் தொடர்ந்து வரும் பாடலும் படத்திற்கு கண்டிப்பாக பலம் கூட்டும் என்பது மட்டும் உண்மை.

உண்மையிலேயே இந்த படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்பது மட்டும் உண்மை. இவ்வளவு எதிர்பார்ப்பு கூடியிருக்கும் நிலையில், ‘சைத்தான்’ படத்தை கடந்த 18-ந் தேதியே படக்குழுவினர் வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால், தற்போது ஏற்பட்டு இருக்கும் பணப்பிரச்சினையால் படத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், வருகிற டிசம்பர் 1-ந் தேதி இப்படத்தை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தை விஜய் ஆண்டனி தனது சொந்த பேனரில் தயாரித்துள்ளார். விஜய் ஆண்டனியே இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY