‘தங்கல்’ வெளியான 16 நாட்களில் ரூ.330 கோடி வசூல் செய்து சாதனை!

0
127

நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் ‘தங்கல்’. கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு வெளியான இப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

குறிப்பாக இப்படத்தில் அமீர்கானின் நடிப்பும், படத்தின் திரைக்கதையும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் வெகுவாகப் பாராட்டுப்படுகிறது. படம் வெளியாகிய முதல் 16 நாட்களில் ‘தங்கல்’ இந்தியாவில் மட்டும் ரூ.330 கோடிகளை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன் சல்மான்கான் நடிப்பில் வெளியான ‘சுல்தான்’, ‘பஜ்ரங் ஜி பைஜான்’ அமீர்கான் நடிப்பில் வெளியான ‘பிகே’ ஆகிய படங்கள் 300 கோடியை வசூலித்து சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் இந்திய அளவில் பாக்ஸ்ஆபீசில் அமீர்கானின் ‘தங்கல்’, ‘பிகே’, ‘தூம் 3’ முதல் மூன்று இடங்களையும், சல்மான்கானின் ‘பஜ்ரங் ஜி பைஜான்’, ‘சுல்தான்’, 4, 5-வது இடத்திலும் உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY