இந்தியாவில் மட்டும் 6500 தியேட்டரில் ரிலீஸ் – சாதனை படைக்கும் பாகுபலி 2

0
67

இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் பாகுபலி-2 படம் அடுத்தமாதம் 28-ம் தேதி ரிலீஸாக உள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கிவிட்டதால் இப்படத்தின் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. படத்தின் விநியோக உரிமை, சாட்டிலைட் உரிமை உள்ளிட்டவை விற்கப்பட்டு விட்டதால் படம் ரிலீஸாவதற்கு முன்பே பெரிய லாபம் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே சமீபத்தில் வெளியிடப்பட்ட பாகுபலி-2 டிரைலருக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழி டிரைலர்களுக்கும் 10 கோடி ஹிட்ஸ் கிடைத்துள்ளது. இதன்மூலம் உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் பட்டியலில் 7வது இடத்தை பிடித்த முதல் இந்திய பட டிரைலர் என்ற சாதனையை பாகுபலி-2 கைப்பற்றியுள்ளது.

இதுஒருபுறம் இருக்க பாகுபலி-2 படம் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் மட்டும் சுமார் 6500 தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 750 தியேட்டர்களிலும், உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் 1000 தியேட்டர்களிலும் படம் ரிலீஸாக உள்ளது. எந்த ஒரு இந்திய படத்துக்கும் இத்தனை திரையரங்குகள் கிடைத்ததில்லை என்கிறார்கள். இதுவே ஒருமிகப் பெரிய சாதனையாகும்.

NO COMMENTS

LEAVE A REPLY