தட்டையான வயிற்றை பெற இந்த ஜூஸை கட்டாயம் குடியுங்கள்

  0
  141

  தொப்பை என்பது உடல் அழகை மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது.

  இதனால் நீரிழிவு, சீரான ரத்த ஓட்டமின்மை, டெஸ்டோஸ்டிரோன் சுரப்பியில் குறைபாடு இது போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

  எனவே நமது உடலில் கொழுப்பை குறைக்கும் ஹார்மோன்களையும் ஊக்கப்படுத்தி, கொழுப்பை கரைத்து, தொப்பையை குறைக்க பயனுள்ள அற்புதமான ஜூஸ் இதோ!

  தேவையான பொருட்கள்
  • கிரீன் டீ பேக் – 1
  • இஞ்சி – சிறிதளவு
  • தேன் – தேவைப்பட்டால்
  செய்முறை

  முதலில் ஓரு கப் நீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் துருவிய இஞ்சியை போட்டு 10-15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

  அதன் பின் கிரீன் டீ பேக்கை செங்குத்தாக அந்த இஞ்சி டீயில் மூழ்குமாறு 5 வைத்து நிமிடங்கள் கழித்து எடுக்க வேண்டும்.

  சிலருக்கு குமட்டல் வராமல் இருக்க வேண்டுமெனில் சிறிதளவு தேனை சேர்த்துக் கொள்ளலாம்.

  குடிக்கும் முறை

  தினமும் இந்த ஜூஸை தொடர்ச்சியாக குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

  நன்மைகள்

  இந்த ஜூஸ் தட்டையான வயிறு பெருவதற்கு மட்டுமின்றி, உடலில் உள்ள நச்சுக்களை அழிக்கவும் உதவுகிறது.

  தினமும் இந்த ஜூஸைக் குடிப்பதால், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேமப்டுத்தி, மூளையின் செயற்பாட்டை சீராக்குகிறது.

  NO COMMENTS

  LEAVE A REPLY