“ஒரு ஹீரோக்கு ஒரு ஹீரோயின் போதுங்க” ஜோதிகா சுளீர்

0
194

ஜோதிகா ரீஎன்ட்ரி ஆனபின் நடிக்கும் இரண்டாவது படம்”மகளிர் மட்டும்” இதில் பைக் ஓட்டுவது,சண்டை போடுவது போன்ற காட்சிகளில்  ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார்,இந்த படத்தில் இவரை தவிர ஊர்வசி,சரண்யா பொன்வண்ணன்,பானு பிரியா போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

magalir-mattum-movie-songs

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ஜோதிகா இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்,அவர் கூறியதாவது நம் சமூகத்தில் சினிமா பெரும் பங்கு வகிக்கிறது.இந்நிலையில் ஒரே படத்தில் ஒரு ஹீரோவுக்கு ரெண்டு ,மூன்று  ஹீரோயினிகள் தேவை இல்லை,அதை பார்க்கும் இளைஞர்கள் அதேபோல் இரண்டு மூன்று காதலி வைத்து கொள்வதில் தவறில்லை என்று நினைப்பார்கள்.இது மாற வேண்டும் என்று ஜோதிகா கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY