மொறுமொறு தேங்காய்ப்பால் சிக்கன்

0
124

தேவையான பொருட்கள்:

 1. 500g சிக்கன்கறி
 2. கடுகு எண்ணெய்
 3. உப்பு தேவைக்கேற்ப
 4.  மிளகு தேவைக்கேற்ப
 5.  இஞ்சி பூண்டு விழுது
 6.  முக்கால் கப் சுகர் சேர்க்காத தேங்காய்ப்பால்
 7.  தேங்காய் துருவல் தேவைக்கேற்ப
 8.  தேங்காய் அரைத்தது
 9.   3-4 முட்டை

செய்முறை:

 1. முதலில் சிக்கன்கறியை மெலிதாக நீளநீளமாக வெட்டிவைத்து கொள்ளவும்.
 2. மூன்று கிண்ணங்களில் முறையே ஒரு கிண்ணத்தில் தேங்காய் பால் மற்றும் முட்டையை அடித்து வைத்து கொள்ளவும்.
 3. இன்னொரு கிண்ணத்தில் இஞ்சிபூண்டு விழுது மற்றும் கரம் மசாலா கொஞ்சமாக வைத்து கொள்ளவும்.
 4. மற்றொன்றில் தேங்காய் துருவலை வைத்து கொள்ளவும்.
 5. நெஞ்சுக்கறியை இரண்டு கிண்ணங்களிலும் முக்கி எடுத்து காய வைக்கவும்.(தேங்காய் துருவலை தவிர )
 6. பின்பு தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு இருபுறமும் பொன்னிறமாகும்வரை திருப்பி போடவும்.
 7. கடைசியாக திருப்பி போடும்பொழுது தேங்காய் துருவலை தூவி திருப்பி போடவும்.
 8. சுவையான,மொறுமொறுப்பான தேங்காய்ப்பால் சிக்கன் ரெடி.
 9. சாஸுடன் பரிமாறவும்.

NO COMMENTS

LEAVE A REPLY