இலங்கை மக்கள் விரும்பி சாப்பிடும் ஸ்வீட் ,நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க

0
99

தேவையான பொருட்கள்:

  1. பச்சரிசி 1 கோப்பை

2.  ஐந்து தேங்காய்

3.  சீனி 1 கிலோ

4.  பனை வெல்லம் 250 கிராம்

5.  4 மேசைக் கரண்டி ஜவ்வரிசி அல்லது அதே அளவு வறுத்த பாசிப்பருப்பு

6.  ஏலக்காய் தேவையான அளவு பச்சரிசியை ஊறவைத்து இடித்து அரித்து மாவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை:

  1.  பச்சரிசியை ஊறவைத்து இடித்து அரித்து மாவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. தேங்காயைத் துருவி அதன் பாலைத் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  3. பின்னர் அகன்ற சட்டியில் பச்சரிசி மாவு, தேங்காய்ப் பால் 6 கப், சீனி, பனை வெள்ளம், பாசிப்பருப்பு இவற்றை ஒன்றாக ஊற்றி இரண்டு மணி நேரம் கிளர வேண்டும்.
  4. பின்னர் 2 கப் தேங்காய்ப் பாலை ஊற்றிக் கலவை திரண்டு அல்வா போன்ற வடிவம் வரும் வரையிலும் கிண்ட வேண்டும்.
  5. பின்னர் ஏலக்காயைப் பொடியாக்கித் தூவ வேண்டும். பின்னர் தேவைப்பட்டால் முந்திரிப் பருப்பை மேலே தூவலாம்.
  6. அல்வா வடிவத்தில் கையில் ஒட்டாத பதம் வந்ததும் சட்டியை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும். நன்றாக ஆறிய பின்னர் துண்டுகளாக வெட்டிப் பரிமாறலாம்

NO COMMENTS

LEAVE A REPLY