Wednesday, January 17, 2018
சினிமா விமர்சனம்

சினிமா விமர்சனம்

காஷ்மோரா விமர்சனம்

கார்த்தி தனது தந்தை விவேக் மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து பேய் ஓட்டி பிழைப்பை நடத்தி வருகிறார். ஆனால், உண்மையில் இவர் பேய் ஓட்டுபவர் கிடையாது. தனது குடும்பத்தில் உள்ளவர்களை வைத்து செட்டப்புகள் செய்து போலியாக இந்த வேலைகளை செய்து வருகிறார். மக்களும் இவருடைய சித்து விளையாட்டை உண்மையென்று...

தேவி விமர்சனம்

மாடர்ன் பெண்ணை திருமணம் செய்ய நினைக்கும் பிரபுதேவா, பாட்டியின் விருப்பத்தின் பேரில் கிராமத்து பெண்ணான தமன்னாவை திருமணம் செய்ய நேரிடுகிறது. திருமணத்திற்கு பிறகு அவளை மும்பைக்கு அழைத்து செல்லும் பிரபுதேவா, அவளை எப்படியாவது பேசி கிராமத்திற்கு அனுப்பி வைத்துவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில், பிரபுதேவா...

‘றெக்க’ விமர்சனம்

பிரபல தாதாவான கபீர் சிங்கின் ஆட்கள் மற்றொரு ரவுடியான ஹரிஷ் உத்தமனின் தம்பியை போட்டுத் தள்ளுகிறார்கள். இதனால் கோபமடைந்த ஹரிஷ் உத்தமன், கபீர் சிங்கை பழிவாங்க நேரம் பார்த்து காத்திருக்கிறார். இதன்பிறகு கதை 6 மாதத்திற்கு பின்னோக்கி நகர்கிறது. காதலர்களை சேர்த்து வைப்பதை தனது லட்சியமாக கொண்டுவரும் விஜய்...

ரெமோ விமர்சனம்

சிவகார்த்திகேயனுக்கு பெரிய நடிகராக வேண்டும் என்ற கனவு. ஆனால், அவருக்கு சரியாக வாய்ப்புகள் அமைவதில்லை. கே.எஸ்.ரவிக்குமார் படத்துக்கு ஹீரோ தேர்வு செய்வதாக அறிந்து, அவரிடம் சென்று வாய்ப்பு கேட்கிறார். முதலில் காதல் காட்சியில் சிவகார்த்திகேயனை நடிக்கச் சொல்கிறார். ஆனால், அவருக்கோ ரொமான்ஸ் சுத்தமாக வருவதில்லை. இதனால், கே.எஸ்.ரவிக்குமார்...

எம் எஸ் தோனி – திரை விமர்சனம்

கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் புகழை மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்ற பெருமைக்குரியவர் கேப்டன் எம்.எஸ்.தோனி. அவருடைய தலைமையில் இந்திய அணி பல்வேறு சர்வதேச கோப்பைகளை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. அப்படிப்பட்ட தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்துள்ள படமே ‘எம்.எஸ்.தோனி’. இப்படத்தில் தோனி எங்கு பிறந்தார்? எப்படி...

தொடரி – திரை விமர்சனம்

டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு ரெயில் கேண்டீனில் நாயகன் தனுஷ் வேலை செய்கிறார். நடிகைக்கு மேக்கப் போடும் கீர்த்தி சுரேசும் அதே ரெயிலில் வருகிறார். கீர்த்தி சுரேஷை பார்த்தவுடனே அவள் அழகில் மயங்கிவிடுகிறார் தனுஷ். பாட்டு பாடுவதில் ஆர்வம் உள்ளவரான கீர்த்தி சுரேஷிடம் தனக்கு பாடலாசிரியர்களைத்...

ஆண்டவன் கட்டளை – திரை விமர்சனம்

குடும்ப கஷ்டம் காரணமாக விஜய் சேதுபதி லண்டனுக்கு வேலை தேடிச் செல்ல முடிவெடுக்கிறார். இவருடன் நண்பர் யோகி பாபுவும் லண்டனுக்கு செல்ல முடிவு செய்ய, இருவரும் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வருகிறார்கள். சென்னையில் இருவரும் ஏஜென்ட் மூலம் பாஸ்போர்ட் எடுக்கிறார்கள். பாஸ்போர்ட்டில் மனைவி பெயர் இருந்தால் விசா எளிதில்...

இருமுகன் – திரை விமர்சனம்

உளவுத்துறை அதிகாரிகளான விக்ரமும், நயன்தாராவும் சேர்ந்து லவ் என்ற மிகப்பெரிய போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனை கொல்வதற்காக பெரிய திட்டம் தீட்டுகிறார்கள். லவ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, மாறுவேடத்தில் அங்கு சென்று குண்டு வைத்து அவனைக் கொல்கின்றனர். இதன்பின்னர் காதலர்களாக இருந்த விக்ரமும், நயன்தாராவும் திருமணம் செய்து...

முடிஞ்சா இவன புடி விமர்சனம்

நான் ஈ கிச்சா சுதீப் - நித்யா மேனன் ஜோடி நாயகர், நாயகியாக நடிக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் இதே ரவிக்குமாரின் வில்லனில் தொடங்கி, ஷங்கரின் ஜென்டில்மேன், எம்ஜிஆரின் மாட்டுக்காரவேலன் வரை... ஏகப்பட்ட படங்களின் உல்டா - புல்டாவாக வெளிவந்திருக்கும் லவ் - ஆக்ஷன் படம் தான் "முடிஞ்சா...

ஜோக்கர் – திரை விமர்சனம்

குரு சோமசுந்தரம் தன்னை ஜனாதிபதியாக நினைத்துக் கொண்டு ஊரில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறார். இவருக்கு உறுதுணையாக காயத்ரி கிருஷ்ணாவும், மு.ராமசாமியும் இருக்கின்றனர். இவர் என்னதான் ஊரின் நன்மைக்காக போராட்டங்கள் நடத்துவது, நீதிமன்றங்களில் வழக்கு நடத்துவது என்று இருந்தாலும், ஊர் மக்கள் அனைவரும் இவரை ஜோக்கராகத்தான்...